Today Gold Rate in Chennai:தாறுமாறாக எகிறும் தங்கம்! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நிலவரம் என்ன? இதோ தகவல்

First Published Mar 12, 2024, 10:05 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

Gold Rate

தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் வகிக்கிறது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில், கடந்த நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டிராமல் ஒரே விலையில் நீடிக்கிறது. 

yesterday Gold Rate

நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.49,200-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராம் ரூ.6,150-க்கு விற்பனையானது.

Today Gold Rate

இன்றைய (மார்ச் 12) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.49,200-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.6,150-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,620ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.52,960-ஆக விற்பனையாகிறது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.1,520 வரை உயர்ந்தது. இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Today Silver Rate

வெள்ளி விலை 50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.79.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.79,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!