எகிறி அடிக்கும் பூண்டு விலை.. ஒரு கிலோ எவ்வளவு கேட்டா ஷாக் ஆயீடுவீங்க.. பேரதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!

First Published Feb 4, 2024, 2:03 PM IST

வரத்து குறைவால்  கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று சற்று விலை குறைந்து ரூ.430க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Garlic

அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று பூண்டு. குறிப்பாக, அசைவ உணவு தயாரிப்பில் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது. தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் பூண்டு பயிரிடப்பட்டாலும், மாநிலத்தின் பெரும்பான்மையான தேவையை ஈடு செய்வதற்கு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து பூண்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

chennai koyambedu

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பூண்டின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிலோ முதல் முதர பூண்டின் விலை ரூ. 500க்கும்,  இரண்டாம் தர பூண்டு 450க்கும், மூன்றாம் தர பூண்டு 400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 மாதங்களாகவே பூண்டின் விலை ஏறுமுகமாக காணப்படுகிறது.

Today garlic Price

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சில்லரை விற்பனை கடைகளில் முதல் தர பூண்டின் விலை ஒரு கிலோ 550 முதல் 600 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Garlic Price Increased

இந்நிலையில், வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்கப்பட்ட நிலையில் இன்று சற்று விலை குறைந்துள்ளது. சில்லறைக் கடைகளில் ரூ.430 வரை விற்பனையாகிறது. 

click me!