சமையலறை சுவரில் உள்ள எண்ணெய் கறையை சுலபமாக அகற்ற சூப்பரான வழி இதோ!

First Published May 9, 2024, 2:12 PM IST


உங்கள் சமையலறை சுவரில் படிந்துள்ள எண்ணெய் கறைகளை மிக எளிதாக நீக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்.

தினமும் சமையலறையில் சமைப்பதால் சுவர்களில் எண்ணெய் பசை படிந்து கிரீஸ் போல் இருக்கும். சமையலறையை அவ்வப்போது சுத்தம் செய்யாவிட்டால் சுவர் கருப்பாகவும், பிசுபிசுப்பாகவும்  மாறிவிடும். எனவே, இதை தடுக்க சமையலறையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். இப்போது உங்கள் சமையலறை சுவரில் உள்ள கிரீஸை எப்படி எளிதாக சுத்தம் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

சமையலறை சுவரில் உள்ள கிரீஸை சுத்தம் செய்வதற்கு முன், சமையலறையில் உள்ள தூசியை முதலில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு முன், சமையலறையில் வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களை அங்கிருந்து அகற்ற வேண்டும். 

சுவரில் படிந்திருக்கும் எண்ணெய் சுத்தம் செய்ய அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால், இதற்காக நீங்கள் வீட்டில் ஒரு துப்புரவு தீர்வைத் தயாரிக்கலாம். இதற்கு வெதுவெதுப்பான நீர், வினிகர் மற்றும் பேக்கிங் சோடா ஆகியவையே தேவை. சரி வாங்க இப்போது அதை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.

க்ளீனிங் கரைசல் தயாரிப்பது எப்படி?: முதலில் ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் நீரை எடுத்து அதில் 3 டீஸ்பூன் வினிகர் மற்றும் பேக்கிங் சோடாவை கலக்க வேண்டும். பிறகு இதில் கடற்பாசியை போட்டு நன்கு ஊற வைக்கவும். எண்ணெய் படிந்த சுவரை சுத்தம் செய்வதற்கான க்ளீனிங் கரைசல் ரெடி.

இதையும் படிங்க: வெறும் 2 நிமிடத்தில் கேஸ் பர்னரை சுத்தம் செய்ய ஈஸியான ஐடியா..!

கைகளில் கையுறைகள்: சமையலறை சுவரை சுத்தம் செய்ய க்ளீனிங் கரைசலை பயன்படுத்தும் போது கைகளில் கையுறைகளை அணிய மறக்காதீர்கள். அதன் பிறகு சுவர்களை தண்ணீரில் கழுவவும். இந்த கரைசல் மற்றும் தண்ணீருடன் சுவரை சுத்தம் செய்யும் போது துண்டு அல்லது உலர்ந்த துணியின் உதவியுடன் சுவரை சுத்தம் செய்யவும். இது பிடிவாதமான எண்ணெய் கறைகளை எளிதாக சுத்தம் செய்யும்.

இதையும் படிங்க: கிச்சனில் துர்நாற்றம்; என்ன செய்யணும்னு தெரியலயா? சிம்பிளான டிப்ஸ் இதோ..!!

பாதிரம் கழுவும் திரவம்: ஒருவேளை கறைகள் மிகவும் ஆழமாக இருந்தால், மேலே குறிப்பிட்டுள்ள கரைசலைக் கொண்டு சுத்தம் செய்த பின் பாத்திரம் கழுவும் திரவத்தைக் கொண்டு சுவரை மீண்டும் சுத்தம் செய்யுங்கள். அதன் பிறகு, சுவரில் உள்ள சோப்பை ஒரு பருத்தி துணியால் துடைக்கவும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!