Asianet News TamilAsianet News Tamil

கிச்சனில் துர்நாற்றம்; என்ன செய்யணும்னு தெரியலயா? சிம்பிளான டிப்ஸ் இதோ..!!

பெரும்பாலான பெண்கள் தங்கள் சமையலறையில் துர்நாற்றம் வீசுவதாக புகார் கூறுகின்றனர். உங்களுக்கும் இந்த பிரச்சனை இருந்தால், இங்குள்ள சில எளிய குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

smart way to get rid of kitchen smells in tamil mks
Author
First Published Sep 21, 2023, 2:07 PM IST

உணவில் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது உங்கள் உணவை மிகவும் சுவையாக மாற்ற உதவுகிறது, ஆனால் அதன் வாசனை சமையலறையுடன் வீடு முழுவதும் பரவுகிறது. இது சில நேரம் உங்களுக்கு சுவையாக இருக்கும் ஆனால் சிறிது நேரம் கழித்து இந்த வாசனை துர்நாற்றமாக மாறும். மேலும் இது உங்களை குறிப்பாக உங்கள் குழந்தைகளை தொந்தரவு செய்கிறது. அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைத் தேட ஆரம்பிக்கிறீர்கள்.
 
துர்நாற்றம் வீசும் சமையலறை யாருக்கு பிடிக்கும்? சமையலறையின் வாசனையால் நீங்களும் கவலைப்படுகிறீர்கள் என்றால், அதை அகற்றுவது நீங்கள் நினைப்பது போல் கடினம் அல்ல. சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன், நீங்கள் சமையலறையில் இருந்து துர்நாற்றத்தை அகற்றுவது மட்டுமல்லாமல், உங்கள் சமையலறையை எப்போதும் மணமாக மாற்றலாம். இந்த தீர்வுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்..

இதையும் படிங்க:  உங்கள் கிச்சன் சிங்க்கில் தூற்நாற்றம் வீசுதா?  நாற்றத்தை விரட்டும் சிம்பிள் டிப்ஸ் இதோ..ட்ரை பண்ணுங்க...!!

உங்கள் வீட்டு கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை நீக்குவதற்கான வழிகள் இங்கே:

  • உங்கள் வீட்டு கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை நீக்க முதலில், ஒரு பாத்திரத்தில் 1லிட்டர் தண்ணீரில் எடுத்து, அதில் 1-2 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கிச்சன் முழுவதும் தெளிக்க வேண்டும்.
  • உங்கள் வீட்டு கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை நீங்கள் இயற்கையான முறையிலும் நீக்கலாம் தெரியுமா? அதற்கு முதலில் வாசனை நிறைந்த பூக்களை எடுத்து கொள்ளுங்கள். உதாரணமாக, மல்லிகைப்பூ, குண்டு மல்லி, ரோஜா மற்றும் சம்பங்கி பூ போன்றவை ஆகும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி எடுத்து வைத்த பூக்களை அதில் போட வேண்டும். இப்போது அந்த பாத்திரத்தை கிச்சனில் வைக்கலாம். பூக்களில் இருந்து வரும் வாசனை உங்கள் வீட்டு கிச்சன் முழுவதும் பரவுவதை நீங்கள் உணரலாம்.
  • கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை நீக்க, வீட்டில் பயன்படுத்தப்படும், எலுமிச்சை அல்லது ஆரஞ்சு தோலை தூக்கி எரியாமல், அவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். மேலும் அவற்றுடன் நீங்கள் இலவங்கப்பட்டை தூளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அந்த நீர் நன்கு ஆறிய பின் அவற்றை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் மாற்றி, அந்த நீரை ஸ்ப்ரே பாட்டிலில் கிச்சன் முழுவதும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கிச்சனில் இருந்து துர்நாற்றம் நீங்கும் மற்றும் வாசனை பரவும்.
  • அதுபோல் கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை நீக்க நீங்கள் எலுமிச்சையில் உப்பு சேர்த்து அதனை கிச்சன் முழுவதும் நன்கு தேய்த்து எடுக்க வேண்டும். இதனை உங்கள் கிச்சனில் இருக்கும் துர்நாற்றம் குறையும். 
  • மேலும் கிச்சனில் வீசும் துர்நாற்றத்தை நீங்க, வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம். அதற்கு முதலில், வினிகரை தண்ணீரில் நன்கு கலக்க வேண்டும். பின் அவற்றை கிச்சன் முழுவதும் தெளிக்க வேண்டும். இதனால் கிச்சனில் இருக்கும் துர்நாற்றம் விரைவில் நீங்கும்.

இதையும் படிங்க:  அதிக தீயில் வைத்து பாலை கொதிக்க வைக்கிங்களா? இனி இந்த தப்ப செய்யாதீங்க..!!

எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள், சமையலறையின் வாசனை உங்கள் மூக்கைக் கெடுத்திருந்தால், இன்றிலிருந்து நீங்கள் விரும்பும் இந்த வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொண்டு சமையலறையின் வாசனையிலிருந்து விடுபடுங்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios