உங்கள் கிச்சன் சிங்க்கில் தூற்நாற்றம் வீசுதா?  நாற்றத்தை விரட்டும் சிம்பிள் டிப்ஸ் இதோ..ட்ரை பண்ணுங்க...!!

உங்கள் கிச்சனில் இருக்கும் சிங்கை நீங்கள் சரியாக சுத்தம் செய்யவில்லை என்றால் அதில் துர்நாற்றம் வீச தொடங்குகிறது. இந்த துர்நாற்றத்தை நீக்க சில டிப்ஸ்கள் இங்கே..

how to clean a smelly kitchen sink

சமையலறையில் இருந்து துர்நாற்றம் வீசினால் சிங் சுத்தமாக இல்லை என்று அர்த்தம். காரணம் சாப்பிட்ட பாத்திரத்தை அப்படியே அதில் போடுவதாகும். இவ்வாறு சிங்கில் துர்நாற்றம் வீசினால் கிச்சனில் நின்று சமைக்க கஷ்டமாக இருக்கும். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க சில டிப்ஸ்களை குறித்து இங்கே பார்க்கலாம்.

கிச்சன் சிங்கில் இருந்து வரும் துர்நாற்றத்தை நீக்கும் டிப்ஸ்கள்:

  • முதலில் உங்கள் கிச்சனில் இருக்கும் சிங்க் தொட்டியில் பேக்கிங் சோடாவை தெளித்து 5 நிமிடம் அப்பயே விட்டுவிடவும். 5 நிமிடம் கழித்த பிறகு சிங்க் தொட்டியை பிரஷ் வைத்து நன்கு தேய்க்கவும். மேலும் குச்சியை வைத்து துளைகளிலும் நன்கு குதித்து விட்ட பின் தண்ணீரை திறந்து விடவும். இதனால் மொத்த அழுக்கும் வெளியேறி சிங்க் சுத்தமாக இருக்கும். துர்நாற்றம் வீசாது. 
  • உங்கள் சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை நீக்க ஆரஞ்சு பழத் தோலையும் பயன்படுத்தலாம். அதற்கு முதலில், சிங்க் முழுவதும் ஆரஞ்சு தோலை தேய்த்து அப்படியே விடவும். அது நன்கு ஊறியிருக்கும். சிறிது நேரம் கழித்து தண்ணீரை திறந்து விடவும். இப்படி செய்தால் மொத்த துர்நாற்றமும் பறந்து போய்விடும்.
  • உங்கள் சிங்கில் இருந்து வீசும் துர்நாற்றத்தை போக்க மற்றொரு எளிதான வழி நாப்தலீன் உருண்டைகள். இதை சிங்கில் போட்டு வைத்தால் சிங்கில் துர்நாற்றம் வீசாது.
  • கிச்சன் சிங்க் தொட்டியில் துர்நாற்றம் வீச ஆரம்பித்தால் அதனை சரிசெய்ய உடனே வெள்ளை வினிகரை கொண்டு சிங்க் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடி தீர்வு கிடைக்கும்.
  • உங்கள் சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை போக்க எலுமிச்சை தோல்களை பயன்படுத்தலாம். நீங்கள் பயன்படுத்திய எலுமிச்சை பழத்தின் தோலில் உப்பு தடவி சிங்க் தொட்டி முழுவதும் தேய்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்  துர்நாற்றம் நீங்கி வாசனை வீசத் தொடங்கும்.
  • உங்கள் சிங்க் தொட்டியில் வீசும் துர்நாற்றத்தை நீக்க முதலில் நீங்கள் சிங்க் தொட்டியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு அதில் மிளகுக்கீரை எண்ணெயை தெளித்து விடவும். ஒருவேளை உங்களிடம் மிளகுக்கீரை எண்ணெய் கிடைக்கவில்லை என்றால் புதினா இலைகளை பயன்படுத்தலாம். இது சிங்கில் நல்ல வாசனையை பரப்பும்.
  • பொதுவாக பலரது வீடுகளுக்கு முன் இருக்கும் சாக்கடையை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் கிச்சனில் இருக்கும் சிங் தொட்டியில் துர்நாற்றம் வீசும். எனவே முதலில் சாக்கடையை முறையாக சுத்தம் செய்யுங்கள் பிறகு சிங்கில் இருந்து வரும் துர்நாற்றம் அதுவாகவே குறைந்து விடும். 

இதையும் படிங்க: சமையலறை அழுக்கே ஆகாமல் சுத்தமாக இருக்க சூப்பர் டிப்ஸ்!!

ஆகையால் உங்கள் கிச்சனில் இருக்கும் சிங்க் தொட்டியிலும் துர்நாற்றம் வீசினால் இதுப்போன்ற வழிகளை முயற்சி செய்து பாருங்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios