வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க.. அட்சய திருதியை நாளில் 'இந்த' செடிகளை கொண்டு வாருங்கள்!

First Published May 9, 2024, 1:28 PM IST

அட்சய திருதியை நாளில் வீட்டிற்கு என்னென்ன செடிகளை கொண்டு வரலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இந்துமத மக்கள் எதிர்பார்த்து கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று அட்சய திருதியை ஆகும். "அட்சய" என்றால் "எப்போதும் குறையாதது" அல்லது "நித்தியமானது" என்று பொருள். அதாவது, இந்நாள் அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தருவதாகக் கருதப்படுகிறது. 

2024 ஆண்டில் அட்சய திரிதியா மே 10, 2024 வெள்ளிக்கிழமை, அதாவது நாளை  கொண்டாடப்படுகிறது. திரிதியை திதி நாளை (மே 10) அதிகாலை 04:12 மணிக்கு தொடங்கி மறுநாள் (மே 11) அதிகாலை 02:40 மணிக்கு முடிவடைகிறது.

அட்சய திரிதியா தங்கம் மற்றும் வெள்ளி வாங்குதலுடன் தொடர்புடையது. இருப்பினும், இது தவிர, வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தைத் தொடங்க இது ஒரு சக்திவாய்ந்த நாள் ஆகும்.. அத்தகைய பழக்கங்களில் ஒன்று, பல நன்மைகளை வழங்குகிறது. அதுதான்  'ஒரு பூச்செடியை வளர்ப்பது.' எனவே, அட்சய திரிதியா நாளில் வீட்டிற்கு என்னென்ன செடிகளை கொண்டு வரலாம் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

சூரியகாந்தி: இது பார்ப்பதற்கு  பெரியதாக இருந்தாலும், அதை வீட்டின் உட்புற சூழலில் நடலாம் மற்றும் வளர்க்கலாம். அவை வாழ்க்கை, நேர்மறை மற்றும் ஆரோக்கியத்தைக் குறிக்கின்றன. மேலும், சூரியகாந்தி வீட்டிற்கு மகிழ்ச்சியை சேர்க்கும்.

அமைதி லில்லி: இது பார்ப்பதற்கு பளபளப்பான இலைகள் மற்றும் வெள்ளை பூக்கள் கொண்ட ஒரு அழகான செடி ஆகும். இது காற்றை சுத்தப்படுத்துகிறது. இந்த செடி வீட்டின் ஆற்றலை அமைதிப்படுத்துவதாக கருதப்படுகிறது. இது குறைந்த வெளிச்சத்தில் செழித்து வளர்கின்றன மற்றும் பராமரிப்பது எளிது.

மல்லிகை செடி: இந்த செடியின் நறுமணம் பலரை கவரும். அதன் கவர்ச்சியான வாசனை திரவியத்தால் பதட்டத்தைப் போக்க பயன்படுத்தப்படுகிறது. நேர்மறை ஆற்றலும் அன்பும் இனிமையான வாசனையுடன் இது தொடர்புடையது.  எனவே, இந்த செடியை படுக்கையறை ஜன்னல் அருகே வைத்தால் அமைதியைத் தரும்.

ஆர்க்கிட்ஸ்: இந்த செடி பார்ப்பதற்கு அழகானவை மற்றும் கவர்ச்சியானவை. இது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் நேர்மறையையும் தருவதாக நம்பப்பட்டுகிறது. ஆர்க்கிட்கள் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதால், இது  சிறந்த தூக்கத்திற்கு சிறந்த படுக்கையறை தாவரங்களில் ஒன்றாகும்.

லாவெண்டர்: இந்த செடியின் வாசனை அமைதியாகவும், ஓய்வெடுக்கவும், தூங்கவும் உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக, இது குடும்ப சமநிலை மற்றும் அமைதியை ஊக்குவிக்கிறது. இது சன்னி வீட்டில் தியானம் செய்யும் இடங்களுக்கு ஏற்றதாகும்.

click me!