Stress: மன அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி? எதை பாலோ பண்ணனும், எதை தவிர்க்க வேண்டும், நச்சுனு நாலு டிப்ஸ்

First Published Jun 5, 2022, 2:56 PM IST

Tips for stress Management: இன்றைய தனிமனித வாழ்வில் இன்று மன அழுத்தம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறி விட்டது. இதனை எதிர்கொள்ளத் தெரியாமல் பலரும் வாழ்க்கையே வெறுத்து விட்டது போல் துவண்டு விடுகின்றனர். எனவே மன அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி..?  என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

stress

 
இன்றைய 'பிஸியான' வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். எனவே, இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. 

stress

அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களை கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகிவிட்டது. இதில் இருந்து எப்படி வெளியேறுவது என்பதை காணலாம். முதலில் உங்களுக்கு மனஅழுத்தம் தருவதை மட்டும் கவனியுங்கள். எது உங்களுக்கு மன அழுத்ததை தருகின்றது என்று அதனை மட்டும் தனியே குறித்து வைத்து கொள்ளுங்கள்.

stress

1. மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேண்டுமானால் நன்றாக வாய்விட்டு சிரித்தாலே போதும். சிரிப்பு இணையான மருந்து வேறெதுவும் இல்லை.  .

2. மன அழுத்தத்தில் இருந்து விடுபட, புத்தக வாசிப்பு மிக சிறந்த மருந்து. அது நீங்கள் தேர்வு செய்யும் புத்தகத்தை பொறுத்து உள்ளது. புத்தகம் உங்கள் வாழ்வை வழிநடத்தும் ஆசான். உங்களை நன்வழிப்படுத்தும் புத்தகத்தை தேர்வு செய்து படியுங்கள்.

stress

3. நெருக்கமாக பழகுபவர்களிடம் உங்களது உணர்வுகளை கொட்டி விடுங்கள். வழக்கத்தை விட ஓய்வும்,  தூக்கமும் அவசியமாகும். ஊட்டச் சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியமாகும்.

 4. உணவு சாப்பிட விரும்பாத போது, பழங்கள், காய்கறிகள், நட்ஸ் வகைகளை சாப்பிடலாம். உடலில் எப்போதும் நீர்சத்து இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். உடற்பயிற்ச்சி மனதை இலகுவாக்கும். மன நிலையை மேம்படுத்தும்.

stress

இன்று பலருக்கும் வேலை குறித்த பயம் அடிக்கடி வந்து செல்வதே மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாகின்றது. முதலில் வேலை என்பது உங்கள் வாழ்வாதாரத்திற்க்காக என்பதை உங்கள் மனதிற்கு புரிய வையுங்கள். அதனை வாழ்வாக கருதுவதால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க...White Hair Reasons: நரைமுடி பிரச்சனை இருக்கா..? முடியை எளிதாக கருப்பாக்க, இதை மட்டும் பாலோ பண்ணுங்கோ...

click me!