White Hair Reasons: வெள்ளை முடி பிரச்சனை இன்றைய பெரும்பாலானோர், சந்திக்கும் பிரச்சனையாகும். இவற்றை சமாளிக்க சில பயனுள்ள தகவல் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

வெள்ளை முடி பிரச்சனை இன்றைய பெரும்பாலானோர், சந்திக்கும் பிரச்சனையாகும். இவற்றை சமாளிக்க சில பயனுள்ள தகவல் என்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்றைய நவீன வாழ்கை முறையில், நரைமுடி என்பது ஒரு பிரச்சனையாக மாறிவிட்டது. அதிலும், குறிப்பாக, 30 வயதை கடந்த அனைத்து ஆண்களுக்கும் இதனால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக, இளநரை பிரச்சனைக்கு தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கூந்தலில் ரசாயனங்களின் பயன்பாடு எனப் பல்வேறு காரணங்களால் வருகிறது . இந்த காரணங்களால், கூந்தல் வயதுக்கு முன்பே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. 

வெள்ளை முடியை பிடுங்குவதால் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். 

வெள்ளை முடியை வேரோடு பிடுங்குவதால், உங்கள் தலைமுடியின் வேர்களில் மோசமான விளைவு ஏற்படுகிறது. அகற்றப்பட்ட வெள்ளை முடிக்கு பதிலாக, புதிய முடி வளர்வது சில சமயம் நடக்காமல் போகலாம். உங்கள் முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக மாறும். 

வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் பொருட்கள்:

நெல்லிக்காய் மற்றும் வெந்தய விதைகள், பிளாக் டீ, பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு, மருதாணி மற்றும் காபி, கறிவேப்பிலை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்றும் தன்மை கொண்டவையாகும். 

வெள்ளை முடி வருவதற்கு முக்கிய காரணம், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான் அதேபோன்று, மன அழுத்தம், வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் முடி வெள்ளையாகிறது.

மேலும் படிக்க ....Healthy Food: 71% இந்தியர்களின் பரிதாப நிலை இதுதான்..? அதிர்ச்சியளிக்கும் புதிய ஆய்வு முடிவு ....