Budhan peyarchi: ஜூன் 18ல் புதன்-சுக்கிரன் கூட்டணி...இந்த ராசிகளுக்கு மகாலட்சுமியின் நேரடி அருள் கிடைக்கும்...

First Published Jun 9, 2022, 12:02 PM IST

Budhan- Sukran peyarchi Palangal 2022: நவகிரகங்களில் புதன் மற்றும் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன.  ஜூன் 18 ஆம் தேதி, புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களின் கூட்டணி உருவாகப் போவதால் மகாலட்சுமி யோகம் உருவாகும். இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

shukra rashi parivartan 2022

நவகிரகங்களில் வியாழன் மற்றும் சுக்ரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. சுக்கிரன் ஆடம்பரம், பொருள் இன்பம், காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாக விளங்குகிறார். அதேபோன்று, குரு பகவான்  மகிழ்ச்சி, அறிவு, குழந்தைகள், ஆன்மீகப் பணி, தொண்டு, அறம் மற்றும் முன்னேற்றத்திற்கான காரணியாக விளங்குகிறார். 

shukra peyarchi 2022

ஜூன் 18ல் புதன்-சுக்கிரன் கூட்டணி...

ஜோதிட சாஸ்திரத்தின் படி, புதன்-மற்றும் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகங்களாக கருதப்படுகின்றன. சுக்கிரன் ஆடம்பரம், பொருள் இன்பம், காதல், திருமண வாழ்க்கை போன்றவற்றின் காரணியாக விளங்குகிறார்.  அதேபோன்று,  புதன் கிரகம் புத்திசாலித்தனம், தர்க்கம், உரையாடல், தகவல் தொடர்பு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது. எனவே, இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் இருப்பது சில ராசிகளுக்கு மிகவும் சுபமாக இருக்கும். 
 
ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் இணைவதால் ஏற்படும் பலன் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் பாதிக்கிறது. இப்போது ஜூன் 18 ஆம் தேதி, புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்கள் இணைய உள்ளன. அதன்படி, ஜூன் 18 ஆம் தேதி, சுக்கிரன் கிரகம் தன்னுடைய ராசியான ரிஷப ராசியில் பிரவேசிக்கும். அங்கு ஏற்கனவே புதன் கிரகம் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இரண்டு கிரகங்களின் சேர்க்கை உருவாகப் போவதால் மகாலட்சுமி யோகம் உருவாகும். இந்த யோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகவும் சாதகமாக அமையப் போகிறது. அந்த ராசிகள் யார் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

shukra peyarchi 2022

மேஷம்:

ஜோதிட சாஸ்திரப்படி, புதன்-சுக்கிரன் கூட்டணி மேஷ ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் உருவாகி வருகிறது. இது, பணம் மற்றும் பேச்சுக்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கக்கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில், நிதி நிலைமை மேம்படும். 
 

shukra

கடகம்:

கடக ராசிக்காரர்கள் புதன் மற்றும் சுக்கிரனின் கூட்டணி சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்கு 11ம் வீட்டில் மகாலட்சுமி யோகம் அமைகிறது. இது உங்களுக்கு தொழிலில் முன்னேற்றம் தரும். எனவே, இந்த காலத்தில் இவர்களின் வருமானம் அதிகரிக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் கூடும்.

shukra peyarchi 2022

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், புதன் கூட்டணி  தொழில்-வியாபாரத்தில் வலுவான ஆதாயங்களைக் கொடுக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். இதுவரை தடைபட்ட காரியம் நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். இதன் மூலம் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வருமானம் அதிகரிக்கும். 

shukra peyarchi 2022

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு  புதன் - சுக்கிரன் கூட்டணி சிறப்பாக இருக்கும். இந்த இடம் வேலை மற்றும் மற்றும் பணிக்கான ஸ்தானமாக பார்க்கப்படுகின்றது. அத்தகைய சூழ்நிலையில், இந்த காலகட்டத்தில் நீங்கள் ஒரு புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இந்த காலகட்டத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பு உள்ளது. இந்தக் காலத்தில் உங்களுக்கு அன்னை லட்சுமியின் நேரடி அருள் நிலைத்திருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

shukra peyarchi 2022

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், புதன் கூட்டணி தொழில்-வியாபாரத்தில் வலுவான ஆதாயங்களைக் கொடுக்கும். புதிய வேலை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். இதன் மூலம் பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பணி சிறப்பாக இருந்ததற்காக பாராட்டப்படும். ஆரோக்கியம் மேம்படும். மொத்தத்தில் இந்த நேரம் பலன் தரும். 

click me!