Rahu Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சி...2023 வரை ராகுவின் அருள் மழையில் நனையும் ராசிகள்..நீங்கள் என்ன ராசி ?

First Published Jun 16, 2022, 8:01 AM IST

Rahu Ketu Transit 2022- Rahu Peyarchi 2022 Palangal: ராகு மற்றும் சுக்கிரன் இடையே நட்பு உணர்வு இருப்பதால், இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை பிப்ரவரி 21, 2023 வரை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு செல்வ செழிப்பை அளிக்க இருக்கிறது. இதனால், எந்தெந்த ராசிகள் பலனடைவார்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

ஜோதிடத்தின் பார்வையில், நிழல் கிரகமான ராகுவும், கேதுவும் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள் பயணம் செய்வார்கள். இந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்வார்கள். ராகு பகவான் இப்போது மேஷ ராசியில் சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து சுக்கிரனின் பரணி நட்சத்திரத்திற்கு  இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். அப்படியாக, ராகு பிப்ரவரி 21, 2023 வரை இந்த ராசியில் இருப்பார். இதனால், எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கப்போகிறது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

மேஷம்: 

ராகுவின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இதனால், மேஷ ராசிக்கார்ரகளுக்கு நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியம் நிறைவேறும். வாழ்வில் வருமானம் உயரும். வேலையில் வெற்றி  பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும்.
 

 ரிஷபம்: 

ராகுவின் நட்சத்திர மாற்றம், சுக்கிரனின் அதிபதியான ரிஷப ராசிக்காரர்களுக்கு வாழ்வில் முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடி வரும். ரிஷப ராசிக்காரர்களுக்கு இக்காலம் புதிய வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும். வாழ்வில்  பெரிய பதவி வாய்ப்புகள் கிடைக்கலாம். வருமானத்தில்  இரட்டிப்பு அதிகரிப்பு இருக்கும். இது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்தும். பணியிடத்தில் மரியாதையும் உயரும்.

கும்பம்:

ராகுவின் நட்சத்திர மாற்றம், கும்பத்தில் பிறந்தவர்களுக்கு  சுப காரியங்கள் வந்து சேரும். திடீர் பணம் கைக்கு வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வு கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க முயற்சி வெற்றியை தரும். திருமணமானவர்களுக்கு செல்வம் பெருகும். வீட்டில் விசேஷங்கள் நடைபெறும். 
 

துலாம்: 

துலா ராசிக்காரர்களுக்கு ராகுவின் நட்சத்திர மாற்றம் சிறப்பாக இருக்கும். சுக்கிரனுடன் ராகுவுக்கு நட்பு இருப்பதால், துலா ராசிக்காரர்களுக்கு வாழ்வில் புது ஒளி பிறக்கும்.  மன உளைச்சல் நீங்கி மன மகிழ்ச்சி அதிகரிக்கும். காரியத்தடைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். திடீர் சுப செலவுகள் வந்து சேரும். வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

மேலும் படிக்க....Suriyan Peyarchi 2022: இன்று சூரியனின் பெயர்ச்சி...இந்த மூன்று ராசிகளுக்கு வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..

click me!