Budhan peyarchi 2022: ஜூன்3 ஆம் தேதி ரிஷப ராசியில் புதனின் பிற்போக்கு நகர்வு...யாருக்கு நேரடி அருள் கிடைக்கும்

First Published May 31, 2022, 8:00 AM IST

Budhan peyarchi 2022 Palangal: ஜூன் 3 ஆம் தேதி, புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்கிரமாவார். எனவே, புதனின் இந்த பிற்போக்கு நகர்வு எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

budhan peyarchi 2022

ஜூன் 3 ஆம் தேதி புதனின் பிற்போக்கு நகர்வு:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரக மாற்றங்களின் அடிப்படையில் ஜூன் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் 2022 ஆம் ஆண்டின் ஜூன்  மாதத்தில் 5  கிரகங்கள் இடம் மாறுகின்றன.

ஜோதிடத்தின் படி, புத்திசாலித்தனம், விவேகம் மற்றும் பேச்சின் கடவுளாக கருதப்படுபவர் புதன். இதுவரை மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இவர், 2022 ஜூன் 3 ஆம் தேதி பின்னோக்கி நகர்வார். ஜூன் 3 ஆம் தேதி, புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்கிரமாவார். எந்த ஒரு கிரகமும் வக்கிரமாகும் போது, அது நேராக நகராமல் பின்னோக்கி செல்லும். 

budhan peyarchi 2022

எந்த நபரின் ஜாதகத்தில் புதன் கிரகம் வலுப்பெற்றிருக்கிறதோ, அந்த நபர் வியாபாரம், கல்வி, தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றம் அடைவார். குறிப்பாக, புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசியின் அதிபதியாவார். ஆகவே இந்த இரண்டு ராசிக்காரர்களும் பணம் மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் சிறப்பான பலன்கள் உண்டு. மேலும்,  புதனின் இந்த பிற்போக்கு நகர்வு எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்களை தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
 

budhan peyarchi 2022

துலாம்:

ஜூன் 3 ஆம் தேதி புதனின் பிற்போக்கு நகர்வு, இந்த நேரத்தில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த நேரத்தில், உங்கள் தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நீங்கள் பங்கு சந்தையில் நல்ல பணம் சம்பாதிக்கலாம்.  நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். சிக்கிய பணத்தையும் பெறலாம். பேச்சு சம்பந்தமாக தொழில் செய்பவர்களுக்கு இந்த நேரம் சிறப்பானதாக இருக்கும். 
 

budhan peyarchi 2022

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு உருவாகும்ஜூன் 3 ஆம் தேதி புதனின் பிற்போக்கு நகர்வு, நன்மையாக இருக்கும்.  வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். உங்களுக்கு பணம் கிடைக்கும். உயர் பதவிகளை பெறுவீர்கள். மரியாதை கூடும். தொழிலதிபர்களுக்கும் இந்தநேரம் மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுக்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலை கிடைக்கும். 

budhan peyarchi 2022

தனுசு:  

ஜூன் 3 ஆம் தேதி புதனின் பிற்போக்கு நகர்வு, உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் வாகனங்கள் மற்றும் நிலம், சொத்துக்கள் வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும்உங்களுக்கு நல்ல நேரம் ஆகும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் அரசியலில் வெற்றி பெறலாம். வாழ்வில் உங்களுக்கு வெற்றி நிச்சயம். நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த விஷயம் நிறைவேறும். தொட்டது துலங்கும்.

budhan peyarchi 2022

கன்னி: 

கன்னியில் பிறந்தவர்களுக்கு,ஜூன் 3 ஆம் தேதி புதனின் பிற்போக்கு நகர்வு, எதிர்காலத்துக்கான பெரிய திட்டங்கள் உண்டாகும். திடீர் பண வரவு உண்டாகும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள். இந்த நாள் வசீகரமாக இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

budhan peyarchi 2022

மீனம்: 

மீனம் ராசியில் ஜூன் 3 ஆம் தேதி புதனின் பிற்போக்கு நகர்வு, உங்கள் வருமானம் கூடும். உங்களுக்கு, புதிய வருமான ஆதாரங்களும் உருவாக்கப்படும். வியாபாரத்தில் புதிய உறவுகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். மேலும் வியாபாரத்தில் உங்களுக்கு லாபம் நன்றாக இருக்கும். வாழ்வில் வெற்றி உறுதி. தொழில் வியாழன் கிரகத்துடன் தொடர்புடையதாக இருந்தால், இந்த நேரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும்.

மேலும் படிக்க....Weekly Horoscope: இந்த வார ராசி பலன்...30 மே முதல் 5 ஜூன் 2022 வரை....இந்த ராசிகளுக்கு வாழ்வில் வெற்றி உறுதி..

click me!