Sani Peyarchi 2022: அக்டோபர் 23 வரை சனியின் வக்ர பெயர்ச்சி... இந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் உறுதி...

First Published Jun 8, 2022, 4:49 PM IST

Sani Peyarchi 2022 Palangal: நீதியின் கடவுளான சனி பகவான், ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில் பின்னோக்கி நகர்ந்து வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். சனியின் இந்த பிற்போக்கு நகர்வு யாருக்கு என்னென்னெ பலன்கள் தரும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 
 

sani peyarchi 2022

சனி பெயர்ச்சி 2022:

ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில், நிகழ்ந்துள்ள சனியின் பிற்போக்கு நகர்வு அனைத்து ராசிகளிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், சனி பகவான் ஜூன் 5 முதல் அக்டோபர் 23 வரை கும்பம் ராசியில் வக்ர நிலையில் இருப்பார். ஒருவரது ஜாதகத்தில், வக்ர சனி சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், அதேசமயம் சிலருக்கு அசுபம் பலன்களையும்  தருவார். அதன்படி எந்த ராசிக்கு சுப பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

sani peyarchi 2022

மேஷம்:

சனியின் பிற்போக்கு இயக்கம் மேஷ ராசியினருக்கு நன்மை பயக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீங்கள் நீண்ட நாட்களாக எண்ணி இருந்த பல ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும்.வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் அடைவார்கள். வருமான உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. உங்களின் நீண்ட நாள் ஆசைகள் இன்று நிறைவேறும்.

sani peyarchi 2022

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் தலைகீழ் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் திருமணமாகாதவர்களின் திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுவாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான  இருக்கும். தடைபட்ட வேலைகள் இந்த காலத்தில் நடந்து முடியும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோயிலிருந்து விடுபடுவீர்கள்.  

sani peyarchi 2022

சிம்மம்:

சிம்ம ராசிக்கு சனியின் பிற்போக்கு நகர்வின் பலன் கலவையாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் தடைகள் ஏற்படலாம். ஆனால் கடின உழைப்பால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மாணவர்கள் கல்வியில் சிறந்த அனுபவத்தை பெறுவார்கள். இந்த நேரத்தில், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
 

sani peyarchi 2022

மகரம்:

சனியின் பின்னோக்கி நகர்வு, மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும். வாகனம், சொத்து வாங்க இதுவே சிறந்த நேரம் ஆகும். மகர ராசியை சனி பகவான் ஆட்சி செய்கிறார். எனவே, இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வில் வெற்றி நிச்சயம். பொருளாதாரம் மேம்படும். 

மேலும் படிக்க ....Guru Peyarchi 2022: கும்ப ராசியில் குரு பெயர்ச்சி....இன்னும் 14 நாட்களில் இந்த ராசிகளின் பொன்னான நாள் ஆரம்பம்

click me!