summer eyes care tips : கோடையில் கண்களை பராமரிக்க 'இந்த' டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

First Published May 3, 2024, 9:03 PM IST

கோடைக்காலத்தில், கண் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், கண் பிரச்சினையால் தலைச்சுற்றல் ஏற்படுத்தும். எனவே, கோடைக்காலத்தில் கண்களைப் பராமரிக்க சில குறிப்புகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். அவை..
 

கோடையில் அதிகரிக்கும் வெப்பநிலை நம்முடைய ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும். குறிப்பாக, இந்த பருவத்தில், பல வகையான உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். ஆகையால், வெப்பநிலை அதிகரிக்கும் போது,     நம் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்கு தெரியுமா.. வெப்பநிலை அதிகரிப்பு கண்களை பாதிக்கும் என்று. குறிப்பாக மதியம் நேரத்தில் சூரிய ஒளி நம் கண்களில் நேரடியாக படும் போது,   கண் தொடர்பான பல பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும். எனவே, சரியான கவனிப்பு மற்றும் சில குறிப்புகளை பின்பற்றுவதன் மூலமாக தான், கோடையில் கண் தொடர்பான பல பிரச்சனைகளை நம்மால் தடுக்க முடியும்.

கோடையில் புற ஊதாக் கதிர்களில் இருந்து எப்படி நாம் நம் சருமத்தை பாதுகாக்கிறோமோ அதுபோல் தான் கண்களைப் பாதுகாக்க சில சிறப்பு 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியம். எனவே, கோடைக்காலத்தில் உங்கள் கண்களை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
 

கண்களை நீரேற்றமாக வையுங்கள்: கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதுபோல், கண்களும் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில், கோடை காலத்தில் கண்கள் அடிக்கடி வறண்டு போகும். அதுமட்டுமின்றி, அதிக வெப்பம் காரணமாக, கண்களில் வறட்சி மற்றும் எரியும் உணர்வு ஏற்படும். எனவே, இது வராமல் தடுக்க சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர, ஆல்கஹால் மற்றும் காஃபின் ஆகியவை கண்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், அவற்றை கோடையில் தவிர்ப்பது நல்லது.

கண்ணாடி அணியுங்கள்: கோடையில் உங்கள் கண்களைப் பாதுகாக்க சரியான கண்ணாடிகளை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். ஆபத்தான புற ஊதா கதிர்கள் காரணமாக, கண்கள் மோசமாக பாதிக்கப்படும். எனவே, கோடையில் உங்கள் கண் ஆரோக்கியத்திற்காக, வெயிலில் செல்லும்போது சரியான கண்ணாடி அணிந்து உங்கள் கண்களைப் பாதுகாத்து கொள்ளுங்கள்.
 

கண் சொட்டு அவசியம்: உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பது போலவே, உங்கள் கண்களும் ஈரப்பதத்துடன் இருப்பது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக, எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிப்படும் நீலக்கதிர்கள் கண்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த சமயத்தில் அவ்வப்போது செயற்கைக் கண்ணீர்த் துளிகள் மூலம் கண்களை ஈரமாக வைத்திருங்கள். குறிப்பாக, அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் மாசுபாட்டால் கண்கள் நீரிழப்பு ஏற்படுவது இயல்பானது. இருப்பினும், செயற்கைக் கண்ணீர் துளிகளால் உங்கள் கண்களை இயற்கையாகவே நீரேற்றமாக வைத்திருக்கலாம்.

கண்களை தேய்க்க கூடாது: பெரும்பாலும் மக்கள் தங்கள் கண்களை கைகளால் தேய்க்கும் பழக்கும் உண்டு. ஆனால், இது கண் தொற்றுநோயை ஏற்படுத்தும். எனவே, உங்களிடம் இந்த பழக்கம் இருந்தால், உங்கள் கைகளை அவ்வப்போது கழுவுங்கள். அதுமட்டுமின்றி, நீங்கள் கண்களில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்திருந்தால், இந்த பழக்கத்தால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு  அதிகம். எனவே, நீங்கள் உங்கள் கண்களைத் தொடும் முன் கைகளைக் கழுவ மறக்காதீர்கள். குறிப்பாக, கண்களைத் தேய்ப்பதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

இதையும் படிங்க: இனி ஆபரேஷன் வேண்டாம்.. மருந்து வேண்டாம்.. கண் ஆரோக்கியமாக இருக்க 3 அற்புத வழிகள் இதோ..!!

நீச்சலின் போது கவனம் தேவை: கோடையில் பலர் நீச்சல் குளங்களுக்கு செல்வார்கள். மேலும் நீச்சல் குளங்களில் காணப்படும் குளோரின் கண்களில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் நீச்சல் குளத்தில் நீந்தும்போது கண்களில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்படாமல் இருக்க நீச்சல் கண்ணாடிகளை அணியுங்கள்.

இதையும் படிங்க: உங்கள் கண்களுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க ப்ளீஸ்..!!

நன்றாக தூங்குங்கள்: கண்கள் ஆரோக்கியமாக இருக்க, இரவில் முழு தூக்கம் பெறுவது மிகவும் அவசியம். இதனால் கண்களுக்கு முழுமையான ஓய்வு கிடைக்கும். நாள் முழுவதும் கண்கள் அதிகம் வேலை செய்வதால், இரவில் கண்களுக்கு முழுமையான ஓய்வு அளிப்பது அவசியம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!