Love Horoscope 2022: வசீகரத்தால் மற்றவர்களை சொக்கி போக செய்யும் ராசிகள்...உங்கள் காதலி ராசி இதில் இருக்கா..?

First Published May 21, 2022, 8:00 AM IST

Love Horoscope 2022: ஜோதிட சாஸ்திரத்தின்படி, தங்கள் வசீகரத்தால் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் குணம் சில கொண்ட ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Astrology

ஒவ்வொரு நபருக்கும் இயல்பாகவே, தனி தனியான குணாதிசியங்கள் தோன்றும். சிலர் எதிரில் இருக்கும் நபரை வெறுப்பேற்றுவார்கள். சிலர், தங்கள் உடன் இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். வெகு சிலர் மட்டுமே, எதிரில் இருக்கும் நபரை தங்கள் குணங்களால் கவர்ந்திழுக்கிறார்கள். அவர்களை தங்கள் அழகில் அப்படி சொக்கி போக வைப்பார்கள். இவர்கள் தங்கள் வசீகர பேச்சால் அனைவரையும் தங்கள் ரசிகர்களாக்கி விடுகிறார்கள். 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, தங்கள் வசீகரத்தால் அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் குணம் சில ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Astrology

மேஷம்: 

மேஷம் ராசியில் பிறந்தவர்கள் வசீகரிப்பதில் வல்லமை பெற்றவர்கள். அவர்கள் பேசும் விதம் பார்ப்போருக்கு கவர்ச்சியாக இருக்கும். அவர்கள் தங்கள் அழகினால் அனைவரையும் கட்டி போட்டு விடுவார்கள். திருமணத்திற்கு பிறகு தனது கணவரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். எப்போதும், பூனை போல தன்னை சுற்றியே வலம் வர வைப்பார்கள். 

love

 விருச்சிகம்: 

விருச்சிகம் ராசிக்காரர்கள் கண்களால் கவர்ந்திழுக்கும் திறன் படைத்தவர்கள். கணவரை தாம்பத்தியத்தில் அதிக நேரம் ஈடுபட வைப்பார்கள். இவர்களும் தங்கள் பேச்சால் அனைத்தையும் சாதித்து விடுகிறார்கள். எந்த விஷயத்திலும் வெற்றி பெற முயல்வார்கள். இவர்களது புத்தி மிகவும் கூர்மையானது. மற்றவர் நினைப்பதை சாமர்த்தியமாக பேசி கட்சிதமாக காரியத்தை முடித்து கொள்வார்கள். இந்த ராசி கொண்ட பெண்களை நீங்கள் திருமணம் செய்தால் இல்லற வாழ்கை மேம்படும்.

Astrology

சிம்மம்: 

சிம்ம ராசி கொண்ட பெண்களை திருமணம் செய்பவர்கள் மச்சகார யோகம் படைத்தவர்கள். இவர்கள் பேசும் விதத்தில் அனைவரும் இவர்கள் பக்கம் ஈர்க்கபடுகிறார்கள். எந்த செயலிலும், வெற்றி பெறக்கூடிய வகையில் இவர்களின் பேச்சு முறை வித்தியாசமானதாக இருக்கும். சமூகத்தில் வித்தியாசமான அடையாளத்தை இவர்கள் உருவாக்குகிறார்கள். தாம்பத்திய உறவிலும் சிறந்தவர்கள்.

Sagittarius

தனுசு: 

தனுசு ராசி பெண்கள் புத்திசாலிகளாகவும் கருதப்படுகிறார்கள். இவர்களது பேச்சுத் திறனாலும், பழகும் விதத்தாலும் மற்றவர்கள் சொக்கிவிடுவார்கள். இவர்கள் பேச்சு திறன் எதிரில் இருப்பவர்களை எளிதாக ஈர்த்துவிடுகிறது.  இந்த ராசி கொண்ட உடலுறவு தொடர்பான விஷயங்கள் முழு வெற்றியை கொடுக்கும். 

மேலும் படிக்க...Love Horoscope: இல்லற வாழ்வில் அதிக ஈடுபாடு கொண்ட 4 ராசிகள்...உங்கள் துணைக்கு வேற லெவல் ட்ரீட் காத்திருக்கு...

click me!