பாகிஸ்தான் பெண்ணுக்குள் துடிக்கும் இந்திய இதயம்; நடந்தது என்ன?

By Ramya s  |  First Published Apr 27, 2024, 11:19 AM IST

பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது இளம் பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


2019 ஆம் ஆண்டு கராச்சியில் இதய நோய் காரணமாக ஆயிஷாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து சிறப்பு சிகிச்சைக்காக, அவர் சென்னை வந்தார். எனினும். அவர் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் சென்னைக்கு வந்தார். சிகிச்சை கட்டாயம் என்ற நிலை இருந்த போதிலும்,, ஆயிஷா கணிசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டார். அவரின் அவலநிலையை உணர்ந்த, சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரில் இதய மாற்று அறுவை சிகிச்சையின் தலைவரான டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் உதவி வழங்க முன்வந்தார்.

சென்னையை ஐஸ்வர்யம் என்ற ஹெல்த்கேர் அறக்கட்டளை நிறுவனமும் இணைந்து ஆயிஷாவுக்கு உதவியது. 
ஜனவரி 31, 2024 அன்று, டெல்லியில் இருந்து சென்னைக்கு ஒரு இதயம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது, ஆயிஷாவின் உயிர் காக்கும் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. 

Tap to resize

Latest Videos

இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இயந்திர சுழற்சி ஆதரவு நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன், இதுகுறித்து பேசி போது “ " முதன்முதலில் 2019 இல் எங்களிடம் ஆயிஷா சிகிச்சைக்கு வந்தார். ஆனால், அவள் வந்தவுடன் அவளுடைய இதயம் நின்றுவிட்டது. நாங்கள் CPR செய்து செயற்கை இதய பம்ப் போட வேண்டியிருந்தது. இதன் மூலம் அவள் குணமடைந்து பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்றாள். பின்னர் ஆயிஷாவுக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவளுடைய இதய செயலிழப்பு மோசமடைந்தது. மேலும் அவளுக்கு மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது, ஆனால் பாகிஸ்தானில் அது அவ்வளவு எளிதாக இல்லை. ஏனென்றால் தேவையான உபகரணங்கள் இல்லை, அவர்களிடம் பணமும் இல்லை" தெரிவித்தார்.

"நாங்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மிகப்பெரிய மையம். நாங்கள் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 100 இதய மாற்று அறுவை சிகிச்சை செய்கிறோம். மேலும் இந்தியர்கள் இல்லை என்றால், அது வெளிநாட்டவருக்கு ஒதுக்கப்படும். இந்த சூழ்நிலையில், இந்தப் பெண் கிட்டத்தட்ட பத்து மாதங்களாகக் காத்திருந்தாள். அதன்பின்னர் கடந்த ஜனவரி மாதம் தான் அவளுக்கு இதயம் கிடைத்தது. இதை தொடர்ந்து அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது” என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆடை வடிவமைப்பாளராக ஆசைப்படும் ஆயிஷா ரஷீத், இந்திய அரசுக்கும், தனது மருத்துவர்களுக்கும் நன்றி தெரிவித்து, எதிர்காலத்தில் இந்தியாவுக்குத் திரும்ப விரும்புவதாகத் தெரிவித்தார்.இதுகுறித்து பேசிய அவர் “ எனக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இந்திய அரசாங்கத்திற்கு நன்றி, நான் நிச்சயமாக மீண்டும் ஒரு நாள் இந்தியா திரும்புவேன். எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நன்றி," கூறினார்.

ஆயிஷாவின் தாயார் சனோபர், இந்தியாவில் தனது மகளின் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் "எனது மகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என் மகளுக்கு 12 வயது இருக்கும் போது அவளுக்கு மாரடைப்பு ஏற்பட்டது, பின்னர் கார்டியோ எம்பதிக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவளை உயிருடன் வைத்திருக்க ஒரே தீர்வு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் பாக்கிஸ்தானில் மாற்று அறுவை சிகிச்சை வசதிகள் இல்லை என்பதை அறிந்தேன், அதனால் எனது மகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணனை அணுகினோம், ஆனால் மருத்துவர்கள் என்னை நம்பி இந்தியாவுக்குப் பயணம் செய்ய ஏற்பாடு செய்யச் சொன்னார்கள். நான் பணம் இல்லாமல் இந்தியா வந்தேன். டாக்டர் பாலகிருஷ்ணன் எனக்கு எல்லா வகையிலும் உதவினார். மாற்று அறுவை சிகிச்சைக்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஒரு பாகிஸ்தான் பெண்ணுக்குள் ஒரு இந்திய இதயம் துடிக்கிறது என்பதில் எனக்கும் மகிழ்ச்சி. இது ஒருபோதும் சாத்தியமில்லை என்று நான் நினைத்தேன், ஆனால் அது நடந்தது” என்று தெரிவித்தார்.

 

click me!