சென்னை வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி! அடுத்த 3 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்! எந்த பகுதியில் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Apr 26, 2024, 6:25 AM IST

இன்று இரவு 10 மணி முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக பின்வருமாறு செயல்பாட்டிற்கு வரும்.


சென்னை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்புப் பாதை வழி தடம் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியில் இன்று  முதல் போக்குவரத்து  மாற்றம் செய்யப்படவுள்ளது. 

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தெற்கு ரயில்வே துறை சார்பாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை பாலத்தில் 4வது ரயில் இருப்பு பாதை வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற உள்ளதால் சுரங்கப்பாதையில் செல்லும் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: #BREAKING: விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தகுதிநீக்கமா? தேர்தல் ஆணையம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இன்று இரவு 10 மணி முதல் 3 மாத காலத்திற்கு ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக பின்வருமாறு செயல்பாட்டிற்கு வரும்.

ராயபுரம் பாலம் மற்றும் ராஜாஜி சாலையிலிருந்து காமராஜர் சாலையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதையில் (போர் நினைவிடம் நோக்கி) அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவை ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை→அனுகு சாலை → வடக்கு கோட்டை சாலை (NFS Road)→ R.A Mandram → முத்துசாமி சாலை → முத்துசாமி சாலை → முத்துசாமி பாலம் → வாலாஜா பாயிண்ட் கொடி மர சாலை →போர் நினைவுச்சின்னம் வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.

இதையும் படிங்க: ஃபுல் மப்பில் மட்டையான அலெக்ஸை மட்டை செய்த வெங்கடேசன்! சினிமா பாணியில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரவுடி!

காமராஜர் சாலையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக வழக்கம் போல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!