Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 42ஆவது லீக் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரண் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 261 ரன்கள் குவித்தது.
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match
இதில் அதிகபட்சமாக 71 ரன்களும், பிலிப் சால்ட் 75 ரன்களும் எடுத்தனர். வெங்கடேஷ் ஐயர் 39, ஆண்ட்ரே ரஸல் 24, ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்களும் எடுத்தனர். பின்னர் கடின இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிராப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்ட்வோ இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match
பிராப்சிம்ரன் சிங் 54 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். ரிலீ ரோஸோவ் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் ஷஷாங்க் சிங் இருவரும் கடைசி வரை அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க, பஞ்சாப் கிங்ஸ் 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்கள் குவித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Kolkata Knight Riders vs Punjab Kings, 42nd Match
இந்த வெற்றியின் மூலமாக முதல் முறையாக 262 ரன்களை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் தான், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் யாராவது பந்து வீச்சாளர்களை காப்பாற்றுங்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.