Breaking: ஓடிடிக்கு வச்சான்பாரு ஆப்பு! பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர்களை மூடப்போவதாக எச்சரிக்கை!

First Published Feb 20, 2024, 1:49 PM IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர்கள் இழுத்து மூடப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தை பொறுத்தவரையில், தமிழகத்தில் தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டு வருவதன் முக்கிய காரணங்கள் குறித்த பிரச்சனை ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுத்திகிறது. 
 

திரையரங்குகள் தொடர்ந்து மூடப்படுவதால், தமிழகத்தில் தொழில் செய்ய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் டெர்ம்ஸ் பிரச்சனை, அதாவது வெளியாக கூடிய திரைப்படங்களில், தனி தியேட்டர்களுக்கு தயாரிப்பாளர்கள் பெற்றுக் கொள்வது அதிகமான தொகை என்றும், மிகப்பெரிய தியேட்டர்களுக்கு மிக குறைவான தொகையை பெற்றுக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தடபுடலாக நடந்த அருண் விஜயின் அக்கா மகள் தியா - தில்லான் திருமணம்! ஒன்று கூடிய குடும்பத்தில்.. வனிதா மிஸ்ஸிங்!
 

இதை தொடர்ந்து திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் 28 நாட்களுக்கு உள்ளாகவே, ஓடிடி-யில்  வெளியாகி விடுவதன் காரணமாக, திரையரங்கில் திரைப்படத்தை வந்து பார்க்க மக்கள் விரும்புவதில்லை என்றும், எனவே ஒரு திரைப்படம்... திரையரங்கில் வெளியாகி ஓடிடியில் வெளியாகும் கால அவகாசத்தை 8 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தாத பட்சத்தில் திரையரங்கை இழுத்து மூடுவோம் என பொதுக்குழுவில் கலந்து கொண்டுள்ள உறுப்பினர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த கோரிக்கைகள் குறித்து, உறுப்பினர்கள் மத்தியில் பேசிய முன்னாள் திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன், இதுபோல் தியேட்டரை இழுத்து மூடுவோம் என எடுத்ததுமே சொல்ல முடியாது அப்படி செய்வது எதிராக செயல்படுவது போல் இருக்கும் என உறுப்பினர்களை சமாதானம் செய்து, பரஸ்பரமாக பேசி நல்ல முடிவை எடுப்போம் அதற்காக தான் இங்கு ஒன்று கூடி உள்ளோம் என தெரிவித்தார்.

Suriya Reaction: 'கங்குவா' முழு படத்தையும் பார்த்த சூர்யா! இயக்குனர் சிவாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?
 

அடுத்தடுத்து பல திரையரங்குகள் மூடப்பட்டு வருவதால் அதிருப்தியில் உள்ள... திரையரங்கு உரிமையாளர்கள், ஓடிடி பிரச்சனையில் மட்டும் சமரசம் இல்லை என்பது கூறுவதால், இன்றைய பொதுக்குழுவில் எப்படிப்பட்ட முடிவு எடுக்கப்படும் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!