125 கோடி மதிப்பு . . . பையன் மாதிரி வளத்தோம்; சாப்ட்வேர தூக்கிட்டு ஓடிட்டான் சார் - மதுரையில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published May 15, 2024, 6:56 PM IST

பைக், கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றுவதற்கான திட்டத்தில் எங்களது மென்பொருளை திருடிவிட்டு ஊழியர் தலைமறைவாகி விட்டதாக மதுரையில் ஒரு தம்பதி புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாநகர் பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் மோகன்ராஜ் மற்றும் பிராகல்யா மோகன்ராஜ்  என்ற தம்பதியினர் கடந்த  6 ஆண்டுகளாக TUCKER MOTORS PVT LTD என்ற இ - கார் மற்றும் இ- பைக் CHARGING ஸ்டேசன் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான  சார்ஜிங் ஸ்டேசன்கள் சாப்ட்வேர் மூலமாக கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில் மோகன்ராஜ், பிராகல்யா தம்பதியினரின் மற்றொரு நிறுவனமான மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள FIRST CALL ஆட்டோமேஷன் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தில் பணிபுரிந்த மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியைச் சேர்ந்த சிவா என்ற மென்பொருள் பொறியாளரை தங்களின் TUCKER MOTORS நிறுவனத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளனர்.

இந்நிலையில் மென்பொறியாளர் சிவா 2 நிறுவனங்களுக்கும் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் ஆகியவற்றை கண்காணிக்க கூடிய அதிகாரியாகவும், அந்த துறையின் தலைவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக TUCKER மோட்டார்ஸ் நிறுவனத்தில் சாப்ட்வேர் புரோகிராமராக பணிபுரிந்து வந்த சிவா கடந்த சில தினங்களுக்கு முன்பாக தங்களது நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.20 லட்சம் மதிப்புலான சாப்ட்வேர்கள் மற்றும் பாஸ்வேர்டை சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து திருடி சென்று விட்டதாக கடந்த 9ஆம் தேதியன்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான மோகன்ராஜ் மற்கும் இயக்குனர் பிராகல்யா ஆகியோர்  SS காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

ஓடும் அரசுப் பேருந்தில் இருந்து திடீரென கழன்று ஓடிய சக்கரம்; இலவச பேருந்துக்காக காத்திருந்து ஏறிய பெண்கள் சோகம்

இந்நிலையில் SS காலனி காவல்துறையினர் தங்களது புகாரின் கீழ் விசாரணை தாமதவாதாக கூறியும்,  20 லட்சம் மதிப்பிலான சாஃப்ட்வேர்கள் தாங்கள் உருவாக்கி  அதற்கான காப்புச் சான்று பெற்றிருந்த நிலையிலும் தங்களிடம் பணிபுரிந்த சிவா திருடி சென்று விட்டதால் இந்தியா முழுவதிலும் உள்ள தங்களது வாடிக்கையாளர்கள் தொழில் முடங்கும் நிலை ஏற்படவுள்ளது. எனவே வழக்கின் அவசர தன்மை அறிந்து விரைவாக விசாரணை நடத்த கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நிர்வாக இயக்குனரான மோகன்ராஜ் மற்கும் இயக்குனர் பிராகல்யா ஆகியோர் இன்று புகார் மனு அளித்தனர்.

இது குறித்து பேசிய TUCKER மோட்டார்ஸ் நிறுவன இயக்குனர் பிராகல்யா, 20 லட்சம் மதிப்பிலான தங்களது நிறுவன சாப்ட்வேர்களை பராமரித்து வந்த சிவா சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களையும், பாஸ்வேர்டுகளையும் திருடி சென்றதால் எங்களை நம்பி தங்களது நிறுவனத்தில் பணிபுரியக்கூடியவர்களும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து சிவாவிடம் காவல்துறையினர் அழைத்து பேசும்போது தங்களிடம் சாப்ட்வேர் மற்றும் பாஸ்வேர்டை தர முடியாது என கூறியுள்ளார். நாள் தோறும் தாமதப்படுத்துவதன் காரணமாக 125 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்கள் முடங்கும் நிலை உள்ளது. 

குடிகார ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்து நிலையத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த பயணி; பொதுமக்கள் ஆத்திரம்

சிவாவிடம் உள்ள சாப்ட்வேர் மற்றும் பாஸ்வேர்ட் மூலமாக தங்களது சார்ஜிங் பாயின்டை கட்டுப்படுத்த முடியும் என்பதால் தங்களது வாடிக்கையாளர்கள் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே இதுபோன்று அதிக மதிப்பிலான காப்புரிமை பெற்ற சாப்ட்வேர்களை திருடி சென்று மோசடியில் ஈடுபட்ட சிவா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நிர்வாக இயக்குனர் மோகன்ராஜ் பேசுகையில், தங்களது நிறுவனத்தில் ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்த சிவா என்பவர் குடும்ப உறுப்பினர் போல இருந்தார். தாங்கள் வெளியூர் சென்றபோது தங்களது நிறுவனத்தில் பணிபுரிவது போல சிசிடிவி கேமராக்களை முழுவதுமாக ஹேக் செய்துவிட்டு தங்களது நிறுவனத்தில் இருந்து சாஃப்ட்வேர் மற்றும் பாஸ்வேர்டுகளை எடுத்துச் சென்று விட்டார். உடனடியாக அதனை மீட்டுத் தரவேண்டும் என கேட்டுக் கொண்டார். 

click me!