Manobala: பிரபல தமிழ் நடிகர் ட்விட்டரில் திடீரென ஆபாச படம்....உடனே டெலிட் செய்யுங்க..? கடுப்பான ரசிகர்கள்...

First Published Jun 9, 2022, 3:13 PM IST

Manobala Controversy: பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனருமான மனோபாலாவின் ட்விட்டர் கணக்கில் திடீரென அடுத்தடுத்து ஆபாச படங்கள் பதிவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

manobala

தமிழ் பிரபல நகைச்சுவை நடிகரான மனோபாலா, இயக்குநர்,  தயாரிப்பாளர்,  காமெடி நடிகர் என திரையுலகில் பன்முக திறன் கொண்டு விளங்குபவர் மனோ பாலா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சில்க் சுமிதா, நாகேஷ், அஜித், விஜய் பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் இணந்து நடித்துள்ளார். நயன்தார உள்ளிட்ட நடிகைகளுக்கு அப்பாவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாதியில் நிகச்சியில் இருந்து வெளியேறினார். 

இதையடுத்து, மனோபாலா தற்போது, பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும்  'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான இவர், படப்பிடிப்பு தளத்தில் சரத்குமார் மற்றும் இதர நடிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முன்னதாக தனது ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். 

manobala

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மனோபாலா, அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோ போன்றவற்றை பதிவு செய்து வருகின்றார். அதில், சினிமா, அரசியல் என அனைத்தை பற்றியும் தன்னுடைய மனதில் பட்ட கருத்துகளை தெரிவிப்பவர். அதற்கு ரசிகர்கள் கமெண்டு செய்து வருவார்கள். 

manobala

இந்த நிலையில், தற்போது பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் இயக்குனருமான மனோபாலாவின் ட்விட்டர் கணக்கில் திடீரென அடுத்தடுத்து ஆபாச படங்கள் பதிவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அந்த புகைப்படங்களை உடனடியாக டெலிட் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர் தனது ட்விட்டர் கணக்கை யாரோ ஹாக் செய்து விட்டனர் என்று தெளிவுபடுத்தியுள்ளார். 

மேலும் படிக்க....திருமணத்தில் தேவதையாய் ஜொலிக்கும் நயன்...மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட கத்ரினாவின் காஸ்ட்யூம் டிசைனர் குழு

click me!