புதிய சரித்திரம் படைத்த விராட் கோலி – 10ஆவது முறையாக 400 ரன்களை கடந்த முதல் வீரராக சாதனை!

First Published | Apr 25, 2024, 10:58 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி 21 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்த சீசனில் 400 ரன்களை கடந்து 10ஆவது சீசனாக 400 ரன்களை கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

ஐபிஎல் கிரிக்கெட் முதல் முறையா அறிமுகம் செய்யப்பட்டது முதல் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். ஆர்சிபி முதல் போட்டியை தொடங்கிய போது விராட் கோலி முதல் போட்டியில் விளையாடினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் ஆர்சிபி 250ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

ஆனால், விராட் கோலி 246ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அவர், 4 ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை. இந்த சீசனில் இதுவரையில் ஆர்சிபி 8 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த 8 போட்டிகளில் முறையே விராட் கோலி 21, 77, 83*, 22, 113*, 3, 42, 18 என்று மொத்தமாக 379 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப் பெற்றிருந்தார்.

Tap to resize

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st Match

இன்று தனது 246ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். இதில், அவர், 29 ரன்கள் எடுத்ததன் மூலமாக இந்த சீசனில் 400 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமின்றி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 10ஆவது முறையாக 400 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

Virat Kohli Orange Cap

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகளாக விராட் கோலி 400 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். 2011, 2013, 2015, 2016, 2018, 2019, 2020, 2021, 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் 400 ரன்களை கடந்துள்ளார். இந்த ஆண்டுகளில் முறையே, 557 ரன்கள், 634, 505, 973, 530, 464, 466, 405, 639 மற்றும் 430* என்று 400 ரன்களை கடந்து அசத்தியுள்ளார்.

Virat Kohli 430* Runs in IPL 2024

இந்த சீசனில் 9ஆவது போட்டியில் விளையாடி ஐபிஎல் கிரிக்கெட்டில் 53ஆவது அரைசதம் அடித்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 94ஆவது அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார். இவ்வளவு ஏன், ஒரு தொடக்க வீரராக ஆர்சிபி அணியில் 4000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

Virat Kohli 400+ Runs in IPL History

விராட் கோலியைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 9 முறை 400 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர். ரோகித் சர்மா 7 முறை 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். இந்த போட்டி உள்பட 246 போட்டிகளில் விளையாடி 7693 ரன்கள் குவித்துள்ளார்.

RCB, Virat Kohli 400+ runs in an IPL season

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை கடந்து 206 ரன்கள் எடுத்தது. இதில், விராட் கோலி 51 ரன்னும், ரஜத் படிதார் 50 ரன்னும் எடுத்தனர்.

Virat Kohli 400 Plus Runs

பவுலிங்கைப் பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும், மாயங்க் மார்கண்டே மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Latest Videos

click me!