விராட் கோலி, ரஜத் படிதார் அதிரடியால் ஆர்சிபி 206 ரன்கள் குவிப்பு! வெற்றி கொடுக்குமா ஆர்சியின் முதல் பேட்டிங்?

First Published Apr 25, 2024, 9:47 PM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் 41ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்துள்ளது.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st IPL 2024 Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 41ஆவது லீக் போட்டி தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st IPL 2024 Match

இது ஆர்சிபியின் 250ஆவது ஐபிஎல் போட்டியாகும். ஆர்சிபியின் முதல் போட்டியில் இடம் பெற்று விளையாடிய விராட் கோலி இன்று ஆர்சிபியின் 250ஆவது ஐபிஎல் போட்டியிலும் இடம் பெற்றுள்ளார். இன்றைய போட்டி விராட் கோலியின் 246ஆவது ஐபிஎல் போட்டியாகும்.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st IPL 2024 Match

ஃபாப் டூப்ளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக தொடங்கினர். இதில், வழக்கம் போல் ஃபாப் டூப்ளெசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து மிடில் ஆர்டரில் வந்த ரஜத் படிதார், விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடினார்.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st IPL 2024 Match

அவர், 20 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் தனது 94ஆவது அரைசதம் கடந்த கோலி 43 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 29 ரன்கள் எடுத்திருந்த போட்டியில் இந்த சீசனில் 400 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்ததோடு, 10 ஆவது சீசனிலும் 400 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st IPL 2024 Match

இவரைத் தொடர்ந்து வந்த மகிபால் லோம்ரார் 7 ரன்னிலும், தினேஷ் கார்த்திக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த ஸ்வப்னில் சிங் 12 ரன்களில் ஆட்டமிழக்க, கேமரூன் க்ரீன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக, ஆர்சிபி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை கடந்து 206 ரன்கள் எடுத்தது

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st IPL 2024 Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டும், நடராஜன் 2 விக்கெட்டும், மாயங்க் மார்கண்டே மற்றும் பேட் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st IPL 2024 Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, ஃபாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் க்ரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), மகிபால் லோம்ரார், கரண் சர்மா, லாக்கி ஃபெர்குசன், முகமது சிராஜ், யாஷ் தயாள்.

Sunrisers Hyderabad vs Royal Challengers Bengaluru, 41st IPL 2024 Match

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, அப்துல் சமாத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெயதேவ் உனத்கட், மாயங்க் மார்கண்டே, டி நடராஜன்.

click me!