Sunrisers Hyderabad, Mahesh Babu
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் விளையாடிய 7 போட்டிகளில் 5ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. தற்போது புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்தாலும் சாதனையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நம்பர் 1 இடத்தில் உள்ளது.
IPL 2024, SRH
இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 277/3 ரன்கள் குவித்து ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்தது. இதற்கு முன்னதாக ஆர்சிபி 263/5 எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனையை முறியடித்து ஹைதராபாத் புதிய சாதனையை படைத்தது.
IPL 2024
இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 287/3 ரன்கள் குவித்து தனது சாதனையை தானே முறியடித்தது. 277 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையை 287 ரன்கள் எடுத்து ஹைதராபாத் முறியடித்துள்ளது.
SRH, Sunrisers Hyderabad
மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 266/7 ரன்கள் குவித்து, ஒரே சீசனில் 3 முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் படைத்தது. இதுவரையில் சொந்த மண்ணில் விளையாடிய ஹைதராபாத் ஒரு போட்டியில் கூட தோற்றதில்லை. ஹைதராபாத் அணியைத் தவிர மற்ற அணிகள் எல்லாம் தங்களது சொந்த மண்ணில் தோல்வியை தழியுள்ளன.
Mahesh Babu, Sunrisers Hyderabad
இப்படி பல சாதனைகளை படைத்த ஹைதராபாத் கடைசியாக டெல்லிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து ஹைதராபாத்திற்கு வந்தது. இன்று ஆர்சிபிக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில், இந்தப் போட்டிக்கு முன்னதாக ஹைதராபாத்தில் முகாமிட்டிருந்த சன்ரைசர்ஸ் வீரர்கள், நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Sunrisers Hyderabad, IPL 2024
இதில் அபிஷேக் சர்மா, பேட் கம்மின்ஸ், மாயங்க் அகர்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ராகுல் திரிபாதி ஆகியோர் இடம் பெற்றனர். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.