Rashmika: அச்சு அசல் ராஷ்மிகாவின் XEROX போல் இருக்கும் பெண்! புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்!

First Published Oct 27, 2023, 12:07 PM IST

இளம் பெண் ஒருவர் அப்படியே நடிகை ராஷ்மிகாவின் XEROX போலவே இருக்கும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

கன்னட திரையுலகின் மூலம், நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, மிக குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், அழகாலும் பல இளம் ரசிகர்களை கவர்ந்தவர். 

தன்னுடைய முதல் பட ஹீரோவான ரக்ஷித் ஷெட்டியை காதலித்து வந்த ராஷ்மிகா, அவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகவும் முடிவு செய்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் பச்சை கொடி காட்டியநிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கன்னட திரையுலகமே பொறாமை கொள்ளும் வகையில் பிரமாண்டமாக நடந்தது.

5 வருடமாக படுத்த படுக்கையில் இருக்கும் இயக்குனர் விக்ரமனின் மனைவி! என்ன அச்சு? நெஞ்சை பதற வைக்கும் உண்மை!
 

ஆனால் தெலுங்கில் இவர் நடித்த கீதா கோவிந்தம் பட வெற்றியின் பின்னர், விஜய் தேவரகொண்டாவுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக... திருமணத்தை நிறுத்திய ராஷ்மிகா, தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
 

தமிழிலும் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த சுல்தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக 'வாரிசு' படத்திலும் நடித்திருந்தார்.

அந்த பழக்கத்திற்கு சிவகார்த்திகேயன் அடிமை! என்னையும் வற்புறுத்தினார்.. உண்மையை உடைத்த பிரியங்கா மோகன்!
 

தென்னிந்திய மொழி படங்களை தொடர்ந்து, பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா... தற்போது நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஓய்வில்லாமல் படு பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவை ரசிகர்கள் நேஷ்னல் கிரஷ் என கொண்டாடி வரும் நிலையில், அச்சு அசல் இவரை போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D


அந்த பெண்ணின் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் வெளியாகாத நிலையில், இவரும்... திரையுலகில் நடிகையாக அறிமுகமானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. 

அதே நேரம் இது உண்மையா? அல்லது மார்பிங் செய்ததா? என்றும் நெட்டிசன்கள் சந்தேக கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருண் தேஜ் - லாவண்யா திரிபாதி திருமண பத்திரிகையே இவ்வளவு கிராண்டா இருக்கே? எப்போது திருமணம் தெரியுமா?

click me!