200 கிலோமீட்டர் வேகம்.. ஹைவே ரைடுக்கு ஏற்ற பஜாஜின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப கம்மி..

First Published Apr 21, 2024, 9:16 PM IST

பஜாஜின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். அதே நேரத்தில் அதன் விலையும் குறைவு ஆகும்.

Bajaj Electric Scooter

பஜாஜ் விரைவில் இந்திய சந்தையில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, பஜாஜின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும்.

Electric Scooters

இந்த லிமிட் ஆனது நகரத்தில் தினசரி பயன்பாட்டிற்கு போதுமானது. மேலும் வார இறுதி நாட்களில் குறுகிய பயணங்களை திட்டமிடுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்கூட்டரில் பஜாஜ் 3.2kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Bajaj

பெரும்பாலும் பெட்ரோல் ஸ்கூட்டர்களை விட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலை சற்று அதிகமாக இருப்பதால், பலர் அவற்றை வாங்கத் தயங்குகிறார்கள். ஆனால் இந்த புதிய ஸ்கூட்டரை மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட கவர்ச்சிகரமான விலையில் அறிமுகப்படுத்த பஜாஜ் தயாராகி வருகிறது.

Electric Vehicle

இந்த ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை சுமார் ரூ.1,00,000 ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பஜாஜ் இந்த அற்புதமான மின்சார ஸ்கூட்டரை மே 2024க்குள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தலாம். நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கவில்லை.

Mileage Bike: மைலேஜ் 70 கிமீ.. விலையோ ரூ.60 ஆயிரம் தான்.. நல்ல மைலேஜ் பைக்கை உடனே வாங்குங்க..

click me!