தளபதியின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... துணிவு படத்தின் லைஃப் டைம் கலெக்‌ஷனை ஒரே நாளில் காலி பண்ணிய லியோ!

First Published Oct 20, 2023, 1:15 PM IST

கர்நாடகாவில் அஜித்தின் துணிவு படம் வசூலித்த மொத்த வசூலையும், லியோ திரைப்படம் முதல் நாளிலேயே வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.

Ajith, vijay

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் திரையரங்குகளில் நேற்று ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். லியோ திரைப்படம் எதிர்பார்த்தபடியே பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக ஜெயிலர் இருந்து வந்த நிலையில், அதனை லியோ முறியடித்து உள்ளது.

Leo vijay

அதுமட்டுமின்றி முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய தமிழ் படங்கள் லிஸ்ட்டிலும் கபாலி, 2.0 போன்ற படங்களின் சாதனையையும் லியோ திரைப்படம் அசால்டாக முறியடித்து உள்ளது. லியோ படம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. தென்னிந்திய மாநிலங்கள் முழுவதிலும் முதல் நாளில் தலா 10 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த முதல் தமிழ் படம் என்கிற பெருமையையும் லியோ பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

vijay, Trisha

இந்நிலையில், தற்போது லியோ படம் செய்துள்ள மற்றுமொரு மாஸான சாதனை குறித்து தெரியவந்துள்ளது. அதன்படி கர்நாடகாவில் நடிகர் அஜித் நடித்த துணிவு படம் வசூலித்த லைஃப் டைம் கலெக்‌ஷனை லியோ திரைப்படம் முதல்நாளிலேயே முறியடித்து உள்ளது. துணிவு படம் கர்நாடகாவில் மொத்தமாகவே ரூ.13.25 கோடிதான் வசூலித்து இருந்தது. ஆனால் லியோ திரைப்படம் நேற்று ஒரே நாளில் அம்மாநிலத்தில் மட்டும் ரூ.13.65 கோடி வசூலித்து உள்ளதாம்.

Leo beats Thunivu

இதன்மூலம் கர்நாடகாவில் துணிவு படத்தின் லைஃப்டைம் கலெக்‌ஷனை ஒரே நாளில் முறியடித்து மாஸ் காட்டி உள்ளது லியோ திரைப்படம். அதுவும் இப்படம் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமாரின் கோஸ்ட் படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆகி இத்தகைய மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது வியத்தகு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஜெயிலர் படத்தின் சாதனையையும் கர்நாடகாவில் அசால்டாக லியோ வீழ்த்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஜெயிலர் சாதனையை அடித்துநொறுக்கி... முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய லியோ

click me!