Venkat : "மண்டை பத்திரம்.. கல்பாத்தி சகோதிர்களிடம் சிக்கிய வெங்கட்".. அவரே வெளியிட்ட GOAT பட ஷூட் பரிதாபங்கள்!

First Published Apr 9, 2024, 11:30 AM IST

Venkat Prabhu : தளபதி விஜய் அவர்களை வைத்து முதல் முறையாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் தான் "The Greatest of All Time". 

GOAT

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்பட வெற்றிக்கு பிறகு தற்போது பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் "The Greatest of All Time" என்ற தனது 68வது படத்தில் நடித்து வருகின்றார் பிரபல நடிகர் தளபதி விஜய். அவருடைய 69வது படத்துக்கு பிறகு, திரைத்துறைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, முழுநேர அரசியலில் அவர் ஈடுபாவுள்ளார்.

Anupama Parameswaran : நீல நிற உடையில் இருக்கும் தேவதை.. அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் போட்டோஸ் இதோ..

Director Venkat prabhu

சென்னை, தாய்லாந்து, கேரளா, துபாய் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் GOAT பட படப்பிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. பொதுவாக விஜயின் படங்களின் அப்டேட் கொஞ்சம் வேகமாக வெளியாகும். ஆனால் GOAT படத்தை பொறுத்தவரை கொஞ்சம் மெதுவாகத்தான் அப்டேட் வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாவில் ஜாலியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Venkat prabhu goat

அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தனது GOAT பட படப்பிடிப்பு இப்படி தான் தினமும் துவங்குகிறது என்று கூறி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் கல்பாத்தி சகோதிரிகள் அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் கட்டையால் வெங்கட் பிரபுவை அடிப்பது போல போட்டோ ஒன்றை போட்டுள்ளார். சீக்கிரம் படத்தை முடியுங்கள் என்று அவர்கள் கூறுவது உள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

Tamil New Year : சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ஏப்ரல் 14 அன்று டிவியில் ஒளிபரப்பாகும் புது படங்கள்!

click me!