
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் இரு மாநில எல்லை சாலையான கம்பம் மெட்டு சாலையில், கன்னிமார் ஓடை எனும் பகுதியில் இன்று காலை முதல் கேரள எண் பதிவு கொண்ட ஒரு கார் நீண்ட நேரமாக புளிய மரத்தடியில் நின்றுள்ளது. அப்போது அந்த வழியாக வேலைக்கு சென்ற சிலர் காருக்கு அருகே சென்று பார்த்த போது காருக்குள் மூன்று பேர் அசைவற்று கிடந்ததைப் பார்த்து கம்பம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மதுரையில் சாலையில் கிடந்த செயின், மோதிரம்; டீ கடைக்காரரின் செயலை கண்டு வியந்துபோன அதிகாரிகள்
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த காரை சோதனை செய்த போது, காருக்குள் ஒரு பெண் உட்பட மூன்று பேர் இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து காரை திறந்து சோதனை செய்தபோது மூன்று பேரும் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
வைகாசி விசாக திருவிழா; பழனி ஆண்டவர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடக்கம்
பின்பு உடலை கைப்பற்றி சோதனை செய்த போலீசாருக்கு மூன்று பேரும் கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மூன்று பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கணவன் ஜார்ஜ் ஸ்காரியா (வயது 50), மனைவி மெர்சி(45), மகன் அகில் (35) என்பதும் தெரியவந்தது. இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலையா? என்று சந்தேக மரணமாக போலீசார் வழக்குபதிவு செய்து மூன்று பேரின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.