அரசியலில் இறங்கும் விஜய்.. அதற்கு முன் இறுதியாக ஒரு படம்.. தளபதி 69ஐ இயக்கப்போவது யார்? - ஆர்வத்தில் Fans!

First Published Feb 2, 2024, 9:51 PM IST

Thalapathy Vijay 69th Movie : தளபதி விஜய் அரசியலில் இறங்குவது ஒருபுறம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், இனி அவரை திரையில் காணமுடியாது என்ற செய்தி அவர்களுக்கு வேதனையை அளிக்கிறது என்றே கூறலாம்.

Atlee

தளபதி விஜய் அவர்கள் இன்று தனது "தமிழக வெற்றி கழகம்" கட்சி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட அதே நேரம் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள மற்றொரு திரைப்படப் பணிகளை முடித்துவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், திரைத்துறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளது அவருடைய அரசியல்களை மிகப்பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில் அவர் தனது 69வது படத்தின் எந்த இயக்குனரோடு இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விரைவில் அந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்றாலும் இணையத்தில் யுகங்கள் தற்பொழுது ஏல துவங்கியுள்ளது, அதன்படி தளபதி விஜய் அவர்களை வைத்து ஏற்கனவே பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீயுடன் மீண்டும் தனது கடைசி திரைப்படத்தில் தளபதி விஜய் அவர்கள் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!

Shankar

அதேபோல பாலிவுட்டில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட "நண்பன்" என்ற திரைப்படத்தில் சங்கர் அவருடைய இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்திருந்தார். ஆகவே மீண்டும் ஒருமுறை அவர் சங்கருடன் இணைய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

karthick subbaraj

மூன்றாவதாக பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவருடைய இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் அவர்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. லியோ திரைப்பட விழாவில் விஜய் அவர்களை சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

vetrimaaran

அதே போல பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு கதை சொல்லியிருப்பதாகவும், அதற்கு விஜய் அவர்களும் ஓகே சொல்லி இருப்பதாகவும் தகவல்கள் சில வெளியானது. ஆகவே தளபதி விஜய் தனது இறுதி திரைப்படமாக வெற்றிமாறனின் திரைப்படத்தில் நடிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த இயக்குனர் அவரை இறுதியாக இயக்கப் போகிறார் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும்.

'வானத்தைப் போல' சீரியல் நடிகர் தமன் ஹீரோவாக நடித்துள்ள 'ஒரு நொடி' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

click me!