2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடந்து முடிந்தது. பீகாரில் இந்தத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே லீக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
2024-25ஆம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு வினாத்தாளை தேர்வுக்கு முன்பே கசிய விடுவதற்காக இடைத்தரகர்கள் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளிடம் இருந்து ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை வசூல் செய்தது தெரியவந்தது.
2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடந்து முடிந்தது. பீகாரில் இந்தத் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே லீக் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இதன்படி, அந்த மாநில பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
undefined
தேர்வு நடந்த மே 5ஆம் தேதியே நிதிஷ் குமார் மற்றும் அமித் ஆனந்த் ஆகியோர் பாட்னா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் வீடுகளில் இருந்து வங்கி காசோலைகள் உள்ளிட்ட பிற ஆவணங்களைக் கைப்பற்றினர். ராம் கிருஷ்ணா நகரில் உள்ள லேர்ன் பாய்ஸ் விடுதிக்கு சுமார் 35 மருத்துவ மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதாக கைது செய்யப்பட்ட ஆர்வலர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
உலகில் முதல் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரோந்து சென்ற அமெரிக்க போலீஸ்!
தேர்வுக்கு ஒரு நாள் முன்பு, தரகரிடமிருந்து பெற்ற வினாத்தாளும் தேர்வில் கொடுக்கப்பட்ட வினாதாதளும் ஒன்றுபோல இருந்தன என கைதானவர்கள் ஒப்புக்கொண்டனர் எனவும் காவல்துறை கூறியுள்ளது.
அமித் ஆனந்த் கல்வி ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தேர்வு எழுதுபவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் உதவுவதாக கூறி, மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை அணுகி, அவர்களுடன் உரையாட ஒரு வாட்ஸ்ஆப் குழுவையும் உருவாக்குகிறார்கள்.
அமித் ஆனந்த் டானாபூர் நகர் பரிஷத்தைச் சேர்ந்த ஜூனியர் இன்ஜினியர் சிக்கந்தர் யாதவேந்துவுடன் தொடர்பு கொண்டிருந்தார். சிக்கந்தர் நீட் தேர்வுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் வருவதை அறிந்த அவர் உடனே, ராம் கிருஷ்ணா நகர் வாடகை குடியிருப்பில் வைந்திருந்த வினாத்தாள்களை தீ வைத்து எரித்துவிட்டார்.
வினாத்தாளைப் பெற்றதும் நண்பர்களிடமோ வேறு யாரிடமோ கேள்விகளை தெரிவிக்க முடியாத வகையில் மாணவர்களின் செல்போன்களைப் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். பின் மாணவர்களை தங்களது வாகனங்களில் தேர்வு மையங்களில் இறக்கிவிட்டுள்ளனர்.
குற்றவாளிகள் வைத்திருந்த செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீசாருக்கு அதிலிருந்து ஒரு முக்கியக் குற்றவாளியின் தொடர்பு எண் கிடைத்துள்ளது. அவர்தான் ராம் கிருஷ்ணா நகரில் உள்ள குடியிருப்பை வாடகைக்கு எடுத்து, சிக்கந்தருக்கு உதவியவர் என்று தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்ய விசாரணை நடந்து வருகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் இது இருக்கணும்! ஜுஜூபி விலையில் சோலார் வயர்லெஸ் சிசிடிவி கேமரா!