108 எம்பி கேமரா.. 12 ஜிபி ரேம்.. 6000 mAh பேட்டரி.. 15 ஆயிரம் ரூபாய்க்கு சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்..

First Published Mar 24, 2024, 3:19 PM IST

இந்தியாவில் தற்போது புதியதாக 5ஜி ஸ்மார்ட் போன்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது. ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 5ஜி போன் அசத்தலான அம்சங்களுடன் வெளியாகி உள்ளது.

மிக முக்கியமாக, நிறுவனங்கள் குறைந்த பட்ஜெட்டில் 5G போன்களை அதிகளவில் கொண்டு வருகின்றன. இந்த வரிசையில் சீன ஸ்மார்ட் போன் நிறுவனமான டெக்னோபோவா புதிய போன் ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்கிறது.

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ இந்திய சந்தையில் புதிய போன் ஒன்றை அறிமுகப்படுத்துகிறது. டெக்னோ இந்த போனை Poa 6 Pro என்ற பெயரில் கொண்டு வருகிறது. இந்த போனில் என்னென்ன வசதிகள் இருக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

இந்த 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 29 அன்று வெளியிடப்படும். டெக்னோ போவா 6 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்ஷன் 6080 SoC செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஐபோன் காமெட் கிரீன் மற்றும் விண்கல் சாம்பல் வண்ணங்களில் கிடைக்கும்.

மேலும் டெக்னோ போவா 6 ப்ரோ ஸ்மார்ட்போனில் 70 வாட்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படும். இந்த ஃபோன் Android 14 அடிப்படையிலான HIOS 14 பதிப்பில் வேலை செய்கிறது.

இது 6.78 இன்ச் HD+ AMOLED டிஸ்ப்ளேவை வழங்கும். இந்த போன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டில் கொண்டு வரப்படும். கேமராவைப் பொறுத்த வரையில், இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்சல் பின்புற கேமரா இருக்கும்.

செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 32 மெகாபிக்சல் முன் கேமரா வழங்கப்படும். விலையைப் பொறுத்தவரை ரூ. 15 ஆயிரத்தில் கிடைக்கும் என்று தெரிகிறது.

சென்னை வெள்ளம்.. தூத்துக்குடி வெள்ளம்.. எவ்வளவு தண்ணீர் வந்தாலும் அசால்ட்டாக இந்த ஸ்கூட்டரை ஓட்டலாம்..

click me!