Taapsee : பேட்மிண்டன் வீரருடன் ரகசிய திருமணம்... 10 வருட காத்திருப்புக்கு பின் காதலனை கரம்பிடித்தார் டாப்ஸி..!

First Published Mar 25, 2024, 1:27 PM IST

ஆடுகளம் படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை டாப்ஸி, தன்னுடைய காதலை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Taapsee Pannu, Mathias Boe

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் டாப்ஸி. அப்படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்தார். பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 2 படத்தில் நடித்த டாப்ஸி, பின்னர் பாலிவுட்டுக்கு சென்றார். அங்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்ததால் கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் பாலிவுட்டிலேயே செட்டில் ஆனார்.

Taapsee Pannu

நடிகை டாப்ஸி, மதியாஸ் போ என்கிற பேட்மிண்டன் வீரரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு சந்தித்துக்கொண்டனர். இந்தியன் பேட்மிண்டன் லீக்கில் விளையாடுவதற்காக இந்தியா வந்தபோது மதியாஸ் போவிற்கும், டாப்ஸிக்கு பழக்க ஏற்பட்டு, அது நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக டேட்டிங் செய்து வந்த இந்த ஜோடி, தற்போது சைலண்டாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்... Janhvi Kapoor : திருப்பதி படிக்கட்டில் முட்டிப்போட்டு ஏறிய ஜான்வி கபூர்.. இதுக்காக தானாம்.. அவரே சொன்ன தகவல்..

Taapsee Pannu, Mathias Boe wedding

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இவர்களது திருமணம் கடந்த மார்ச் 23-ந் தேதி நடைபெற்றதாக கூறப்படுகிறது. தங்கள் திருமணத்தை பிரைவேட்டாக நடத்த திட்டமிட்ட டாப்ஸி, இதில் சினிமா பிரபலங்களுக்கு பெரியளவில் அழைப்பு விடுக்கவில்லை. சினிமாவில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே டாப்ஸியின் திருமணத்தில் கலந்துகொண்டனர். மேலும் திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் தங்களை போட்டோ எடுத்து வெளியிடக் கூடாது என்றும் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

Taapsee Pannu, Mathias Boe Marriage

இதனால் டாப்ஸியின் நண்பர்கள் மற்றும் தோழிகள் பலர், திருமணத்தில் கலந்துகொண்ட போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு அவர்களும் சஸ்பென்சை உடைக்காமல் வைத்திருந்தனர். இதனால் கடந்த இரு தினங்களாக இவர்களது திருமணம் பற்றிய தகவல்கள் பெரியளவில் வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது ஒருவழியாக லீக் ஆகி இருக்கிறது. சீக்கிய மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடிகை டாப்ஸியின் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Samantha : மயோசிடிஸால் படாதபாடு படும் சமந்தா... படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததால் பதறிப்போன படக்குழு

click me!