நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது.. KV ஆனந்த் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா

First Published Feb 12, 2024, 9:00 AM IST

மறைந்த இயக்குனர் கே.வி. ஆனந்தின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்ததோடு, சமீபத்தில் நடந்து முடிந்த அவரது மகளின் திருமணத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார் சூர்யா.

suriya Meet KV Anand Family

தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குனராக ஜொலித்தவர் கே.வி.ஆனந்த். ஷங்கர் இயக்கிய சிவாஜி, முதல்வன், பாய்ஸ் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் தான் கே.வி.ஆனந்த். இவர் கடந்த 2005-ம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கிய அயன் திரைப்படம் கே.வி.ஆனந்தை நட்சத்திர இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்தது.

suriya and sivakumar with KV Anand Family

அயன் படத்தில் நாயகனாக சூர்யா நடித்திருந்தார். அயன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து ஜீவாவை வைத்து கோ படத்தை இயக்கினார். இப்படத்தில் அரசியல் நாடகங்களை தோலுரித்து காட்டிய அவர், பின்னர் சூர்யாவின் மாற்றான், காப்பான், தனுஷ் நடித்த அநேகன், விஜய் சேதுபதி நடித்த கவண் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

இதையும் படியுங்கள்... சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது கே.வி.ஆனந்த் மகள் திருமணம் - படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

Suriya with KV Anand Daughter

இப்படி பிசியான இயக்குனராக வலம் வந்த கே.வி.ஆனந்த், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் இந்த திடீர் மறைவு திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. கே.வி ஆனந்திற்கு இருமகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள் சாதனாவிற்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி இருந்தனர்.

suriya gift to KV Anand Daughter Marriage

இந்த நிலையில், சாதனாவின் திருமணத்தில் சூர்யாவால் கலந்துகொள்ள முடியாமல் போனது. கே.வி.ஆனந்தின் நெருங்கிய நண்பராக இருந்தும் சூர்யா அவரது மகள் திருமணத்தில் கலந்துகொள்ளாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து ஷூட்டிங்கில் பிசியாக இருந்த சூர்யா, தற்போது சர்ப்ரைஸாக கே.வி.ஆனந்த் குடும்பத்தினரை சந்தித்து அவரது திருமணமான மகளுக்கு பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். சூர்யாவுடன் அவரது தந்தை சிவக்குமாரும் உடன் சென்று புதுமண ஜோடியை வாழ்த்தி இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நண்பனுக்காக சூர்யா செய்த இந்த செயலுக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கல்யாணத்துக்கு முன்பே ஹனிமூனா? சாய் பல்லவி தங்கச்சி வெளியிட்ட போட்டோஸ் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

click me!