Suriya: கேஜிஎஃப் பட பாணியில் சூர்யாவை இயக்கும் சிறுத்தை சிவா...அடுத்த அதிரடியாக வெளியான மாஸ் அப்டேட்....

First Published May 23, 2022, 12:23 PM IST

Suriya: 'சூர்யா 41' படத்தின்  படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

suriya

தமிழ்  திரையுலகில் முன்னணி நடிகர்களும் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு, இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்துள்ளார் சூர்யா. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

suriya

இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படம் மீனவர்களின் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. 'சூர்யா 41' படத்தின்  படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது. 

suriya

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் கூட வெளியானது. சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக கொண்டு இந்த படம் இயக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்த படத்திற்காக நடிகர் சூர்யா, தற்போது ஜல்லிக்கட்டு காளைகளுடன் பயிற்சி பெற்று வருகிறாராம். 

suriya

இந்த இரண்டு படங்களை அடித்து, சூர்யா, சிறுத்தை, விஸ்வாசம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்த சிவாவுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் பீரியட் ஆக்ஷ்ன் பாணியில் இந்த படம் இருக்கும் என்றும், கேஜிஎஃப்  போன்று இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வருகிற ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 மேலும் படிக்க....Priyanka Chopra gift: பிரியங்கா சோப்ராவுக்கு அவரது கணவர் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்...விலை எவ்வளவு தெரியுமா..?

click me!