முதற்கட்ட பணிகள் துவங்கியாச்சு.. கர்ணன் கதாபாத்திரத்தில் களமிறங்கும் "கங்குவா" - ஜோடி சேர்ந்த வாரிசு நடிகை!

First Published Jan 27, 2024, 10:49 PM IST

Suriya's Karna Movie : பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் "கங்குவா" திரைப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஒரு கதை களத்தில் உருவாகி வருகிறது.

Actor Suriya with vijay

தனது திரை வாழ்க்கையில், துவக்கத்தில் சிறிதளவு சறுக்கல்களை சந்தித்தாலும் பிரபல நடிகர் சூர்யா அவர்கள் நேர்த்தியான கதை தேர்வு செய்யும் தனது திறமையால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக மாறியுள்ளார்.

Top 10 TRP : அதிரடி.. சரவெடி.. மளமளவென முன்னுக்கு வந்த 'எதிர்நீச்சல்! செம்ம டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொடர்!

Kanguva

இந்நிலையில் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத முற்றிலும் ஒரு மாறுபட்ட கதைகளத்தோடு உருவாகும் "கங்குவா" என்கின்ற திரைப்படத்தில் சூர்யா அவர்கள் தற்பொழுது நடித்து வருகிறார். இப்பட பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இவ்வாண்டு இறுதிக்குள் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Janhvi kapoor

இந்நிலையில் பிரபல இயக்குனர் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் "கர்ணா" திரைப்படத்தில் கர்ணனாக நடிகர் சூர்யா அவர்கள் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மகாபாரதத்தை தழுவி இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. கர்ணனுடைய கதாபாத்திரத்தை நடிகர் சூர்யா ஏற்று நடிக்க உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் முன்னணி நாயகியாக நடிக்க பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தேர்வாகியுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது முதல் பாகத்திற்கான பணிகள் தற்பொழுது துவங்கியுள்ளது.

இவர் இயக்குனர் மட்டுமல்ல.. டப்பிங், சிங்கிங் என்று கலக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - சில சுவாரசிய தகவல்கள்!

click me!