மணிரத்னம் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பு.. நோ சொல்லிய சூர்யா தங்கச்சி பிருந்தா- காரணம் என்ன?

First Published Mar 24, 2024, 9:10 AM IST

மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமொன்றில் ஹீரோயினாக நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா சிவக்குமார் நிராகரித்துள்ளார்.

Suriya Karthi Sister

நடிகர் சிவக்குமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வருகின்றனர். சினிமா பின்னணியில் இருந்து வந்திருந்தாலும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே இன்று உச்சத்தை தொட்டிருப்பதற்கு காரணம் அவர்களின் கடின உழைப்பு தான். ஆரம்பத்தில் நடிக்கவே தெரியவில்லை என்கிற விமர்சனத்தை எதிர்கொண்ட சூர்யா, இன்று தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

Brindha Sivakumar

அதேபோல் சிவக்குமாரின் இளைய மகன் கார்த்தியும், முதலில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் பருத்திவீரன் என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் இன்று டாப் இயக்குனர்களாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், ஹெச்.வினோத் ஆகியோர் பேமஸ் ஆனது கார்த்தியின் படங்களை இயக்கியதன் மூலம் தான். அந்த அளவுக்கு தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் கார்த்தி.

இதையும் படியுங்கள்... Simbu : மன்மதன் Meets மஞ்சும்மல் பாய்ஸ்... படம் பார்த்து மெர்சலாகி படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய சிம்பு

Brindha Sivakumar rejected Maniratnam Movie

சிவக்குமாரின் மகன்கள் சினிமாவில் சாதித்தது போல் அவரின் ஒரே மகளான பிருந்தா பெரியளவில் பாப்புலர் ஆகவில்லை. அவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பல்வேறு படங்களில் பாடியிருக்கும் தகவலே பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பொன்மகள் வந்தாள், ஜாக்பாட், ராட்சஸி, ஓ2 போன்ற படங்களில் பிருந்தா சிவக்குமார் பாடி இருக்கிறார். அதேபோல் பிரம்மாஸ்திரா படத்தின் தமிழ் வெர்ஷனில் ஆலியா பட்டிற்கு டப்பிங் பேசியதும் பிருந்தா தான்.

kannathil Muthamittal

பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் வலம் வரும் பிருந்தா சிவக்குமாருக்கு ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைத்தும் அவர் அதை நிராகரித்தாராம். அதன்படி மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க முதலில் பிருந்தாவை தான் அணுகினார்களாம். மணிரத்னத்திடம் அந்த சமயத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா மூலம் பிருந்தாவுக்கு இந்த ஆஃபர் கிடைத்திருக்கிறது. ஆனால் தனக்கு நடிப்பில் இண்ட்ரஸ்ட் இல்லை எனக்கூறி பிருந்தா நிராகரித்ததை அடுத்து தான் அந்த ரோலில் சிம்ரனை நடிக்க வைத்திருக்கிறார்கள். மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் படங்களுள் ஒன்றாக உள்ள கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடிக்கும் வாய்ப்பை சூர்யாவின் தங்கை நிராகரித்துள்ள தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இதையும் படியுங்கள்...  அஜித் மகள் அனோஷ்காவா இது? அழகில் அம்மாவையே பீட் பண்ணீட்டாங்க! குடும்பத்தோடு CSK டீ-ஷர்ட்டில் தல ஃபேமிலி!

click me!