இன்று மாலை வெளியாகும் தலைவர் 170 அப்டேட்.. டைட்டில் என்ன? படத்தில் ரஜினியின் பெயர் என்ன? தீயாய் பரவும் தகவல்!

First Published Dec 12, 2023, 8:07 AM IST

Thalaivar 170 Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி வரும் அவருடைய 170வது படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

Amitabh and Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவர் தற்பொழுது நடித்துவரும் தனது 170வது திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை "ஜெய் பீம்" திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ஞானவேல் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்டைலிஷ் ஆக்டர் முதல்.. தாதாசாகேப் பால்கே வரை.. 48 வருட திரை வாழ்கை - ரஜினிகாந்த் பெற்ற விருதுகள் ஒரு பார்வை!

Rithika Singh

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பல ஆண்டுகள் கழித்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் அவர்களுடன் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருவது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே திருநெல்வேலி, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாக உள்ள நிலையில் தலைவர் 170 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பெயர் என்னவாக இருக்கும் என்பது குறித்து யுகங்கள் தற்பொழுது இணையத்தில் எழுந்துள்ளது.

Thalaivar 170 title

படத்தின் டைட்டில் "V" என்ற எழுத்தில் தொடங்குவதாகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பெயர் "A" என்ற எழுத்தில் தொடங்குவதாகவும் கூறப்படுகிறது. பல ரசிகர்கள் இந்த திரைப்படத்திற்கு "வேட்டையன்" என்று பெயர் வைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர், மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய பெயர் "அர்ஜுனன்" என்று இருக்கவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!