வெற்றிநடை போடும் ஜெயிலர்.. புதிய வசூல் சாதனை - நண்பர் "ஏஜென்ட் விக்ரமை" ஓரம்கட்டிய Tiger முத்துவேல் பாண்டியன்!

First Published Aug 31, 2023, 12:04 PM IST

பிரபல இயக்குனர் நெல்சன் திலிப் குமார் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலக அளவில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகின்றது. 

Jailer movie Poster

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் தான் நெல்சன் திலீப் குமார் தளபதி விஜய் நடிப்பில் இவர் இயக்கிய வெளியிட்ட பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தாலும் விமர்சன ரீதியாக சில சருக்கல்களை சந்தித்த நிலையில் அவருடைய அடுத்த திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானது.

இன்று மங்காத்தா டே.. வெற்றியை கொண்டாடும் இயக்குனர் வெங்கட் - இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Rajinikanth and Nelson Dilipkumar

இந்த சூழலில் தான் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் என்ற திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்து கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக அளவில் வெளியானது ஜெயிலர் திரைப்படம். 

இன்று மங்காத்தா டே.. வெற்றியை கொண்டாடும் இயக்குனர் வெங்கட் - இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Rajinikanth and Kamalhaasan

இந்நிலையில் 600 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை நோக்கி பயணித்து வரும் ஜெயிலர் திரைப்படம் தமிழக அளவில் ஏற்கனவேகமலின் விக்ரம் படம் படைத்த சாதனையை முறியடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது ஜெயிலர் திரைப்படம். முதல் இடத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், இரண்டாவது இடத்தில் ஜெயிலர் திரைப்படம், மூன்றாவது இடத்தில் விக்ரம் திரைப்படம், நான்காவது இடத்தில் பாகுபலி 2 திரைப்படம் மற்றும் ஐந்தாவது இடத்தில் விசுவாசம் திரைப்படம் உள்ளது.

இன்று மங்காத்தா டே.. வெற்றியை கொண்டாடும் இயக்குனர் வெங்கட் - இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

TJ Gnanavel

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்தபடியாக சூர்யாவை வைத்து ஜெய் பீம் என்ற மாபெரும் திரைப்படத்தை இயக்கிய பிஜி ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க வருகிறார் இந்த திரைப்படத்தில் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரியாக அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

இன்று மங்காத்தா டே.. வெற்றியை கொண்டாடும் இயக்குனர் வெங்கட் - இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

click me!