பலமுறை கண்டித்தும் கேட்கவில்லை; இரண்டாவது மனைவியை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கணவன்

By Velmurugan s  |  First Published May 17, 2024, 12:40 PM IST

கடலூர் முதுநகரில் இரண்டாவது மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கடலூர் மாவட்டம் முதுநகர் அருகே உள்ள சோனங்குப்பத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இந்துமதி (வயது 35). ரமேஷ் இந்துமதியின் தங்கையான சூர்யா (33) என்பவரையும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்த போது சூர்யா கடலூர் முதுநகரில் வேறு ஒரு நபருடன் தொடர்பு வைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. 

மதுரையில் பெய்த கனமழையால் வீட்டின் மேல் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி காவல்துறை விசாரணை

Tap to resize

Latest Videos

undefined

இதை பலமுறை ரமேஷ் கண்டித்த நிலையிலும் சூர்யா கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ரமேஷ் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பி வந்த போது, உறவினர்களும், குடும்பத்தாரும் சமாதானம் பேசி சூர்யாவை ரமேஷ் உடன் ஒழுங்காக குடும்பம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை; தமிழகத்திற்க ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்

இந்நிலையில் இன்று அதிகாலை சூர்யாவுக்கும், ரமேஷுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சூர்யாவின் கழுத்து கை மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். கொலை குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூர்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோடிய ரமேஷை வலை வீசி தேடி வருகின்றனர்.

click me!