ரன்னிங்கின் போது கார் டயர் வெடித்து விபத்து! தலைக்குப்புற கவிழ்ந்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!

By vinoth kumar  |  First Published May 12, 2024, 6:46 AM IST

திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இந்துமதி,  நந்தனா, ஓட்டுநர் பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். 


திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் தாலுகாவை சேர்ந்தவர் ராஜ்மோகன் மனைவி ரேகா (36). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தோழி மூமன் சங்கீத் மனைவி டெல்பின் தெரசா (22) அவரது இரண்டரை வயது மகள் மற்றும் ரேகாவின் அக்கா இந்துமதி (36) இவரது மகள் மகாலட்சுமி (14) ரேகாவின் மகள்கள் நந்தனா (13) மிருதுளா (8) ஆகியோர் ஒரு காரில் புதுச்சேரி சுற்றுலா செல்வதற்காக புறப்பட்டனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்! 6 நாட்களுக்கு வானிலை நிலவரம் என்ன? கனமழைக்கு வாய்ப்பா? பரபரப்பு தகவல்!

காரை புதுச்சேரியை சேர்ந்த பிரவீன்குமார் (40) ஓட்டி வந்தார். கார் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள எழுத்தூர் கிராமம் அருகே வந்துக்கொண்டிருந்த போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இந்துமதி,  நந்தனா, ஓட்டுநர் பிரவீன்குமார் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:  45 வயதான மாமியார் சித்ரா மீது மருமகனுக்கு இவ்வளவு வெறியா? நடந்தது என்ன? பரபரப்பு தகவல்..!

click me!