Summer Tips : கோடையில் செரிமான பிரச்சனையை சரி செய்ய கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!

First Published Apr 18, 2024, 1:49 PM IST


கோடையில் செரிமான பிரச்சனைகள் வருவது பொதுவானவை. இருப்பினும், இந்த காய்கறிகளை சாப்பிவதன் மூலம் அவற்றை சரி செய்யலாம்.
 

கோடை காலத்தில் நாம் அடிக்கடி நீரிழப்புக்கு ஆளாவது உண்டு. அதன் மிகப்பெரிய தாக்கம் செரிமான அமைப்பில் தான் உள்ளது. அதே சமயம், நாம் கோடை காலத்தில், செரிமான அமைப்பை மோசமாக பாதிக்கும் வகையில் ஏதாவது ஒன்றை சாப்பிடுகிறோம் அல்லது குடிக்கிறோம். இதனால், வாயு, அசிடிட்டி, அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இந்நிலையில், கோடை காலம் வந்தவுடன் வயிறு தொடர்பான பிரச்சினைகளால் நீங்கள் சிரமத்தை சந்திக்கிறீர்கள் என்றால், சில  காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்தலாம். இப்போது அதை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..

கோடையில் செரிமானம் ஆரோக்கியமாக இருக்க சாப்பிட வேண்டி காய்கறிகள்:

வாழைப்பூ: கோடைக்காலத்தில், செரிமானம் ஆரோக்கியமாக இருக்க  வாழைப்பூவைச் சாப்பிடலாம். இது  மிகவும் சத்துள்ள காய்கறி. இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளது. அதுமட்டுமின்றி, இதில்  வைட்டமின் சி, வைட்டமின் ஏ, இரும்பு, மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். குறிப்பாக, வாயு, அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

பூசணிக்காய்: பூசணி மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று. இது கோடைக்கு சிறந்தது. இது குளிரூட்டும் விளைவு மற்றும் அதிக நீர் கொண்டுள்ளது. செரிமானத்தை அதிகரிக்கும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் இதில் அதிகமாகவே உள்ளது. மேலும் இதில் மிகக் குறைவான கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. 

பாலக் கீரை: கோடை காலத்தில் இதை சாப்பிடலாம். இதில் புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளது. மேலும் இது குளிர்ச்சியானது. இது சாப்பிட்டால் ஜீரணிக்க மிகவும் எளிது.

இதையும் படிங்க:  Eggs In Summer : கோடையில் முட்டை சாப்பிடலாமா.. அது நல்லதா..? மீறினால் என்ன நடக்கும்..??

வெள்ளரிக்காய்: கோடை காலத்தில் வெள்ளரிக்காய் மிகவும் நல்லது. இதில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் நீர் இருப்பு செரிமான அமைப்பை மீட்டெடுக்கிறது. எனவே, இதை கோடையில் சாப்பிட்டால் மலச்சிக்கல், வாயு, அஜீரணம் மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் வராது.

இதையும் படிங்க:  Summer Tips : நெஞ்செரிச்சல் இருக்கா..? அப்ப கோடையில் 'இந்த' உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க..!

குடைமிளகாய்: இதில் நார்ச்சத்து மற்றும் நீர் நிறைந்துள்ளது. இவை மலச்சிக்கலை போக்குகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், செரிமானம் மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க பெரிது உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!