iPhone 17 Slim வாங்க ரெடியா? மிகவும் Costly ஐபோனை வெளியிட காத்திருக்கும் Apple - மக்களின் Mind Voice என்ன?

By Ansgar R  |  First Published May 18, 2024, 6:44 PM IST

iPhone 17 Slim Launch : பிரபல ஐபோன் நிறுவனம் தன்னிடம் இருப்பதிலேயே அதிக விலை கொண்ட ஒரு ஐபோனை விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஐபோன் தனது புதிய "ஐபோன் 17 ஸ்லிம்" என்ற மாடலை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிறுவனத்தின் வரிசையில் உள்ள ஸ்மார்ட்போன் மாடல்களில் புதிதாக ஒன்றைச் சேர்க்கலாம் என்று அண்மையில் வெளியான ஒரு அறிக்கை கூறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, குபெர்டினோ நிறுவனம் அதன் வரிசையின் ஒரு பகுதியாக நான்கு மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அந்த நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடுகளாகும். இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் தனது விலையுயர்ந்த ஃபிளாக்ஷிப் போனை விட அதிக விலை கொண்ட புதிய 'ஸ்லிம்' மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

undefined

ஒரு நொடியில் 5 HD திரைப்படங்களை டவுன்லோட் செய்யலாம்.. 6ஜி தொழில்நுட்பம் வந்தாச்சு.. எங்க தெரியுமா?

இந்த ஆண்டுக்கான ஐபோன் 16 தொடரை ஆப்பிள் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஐபோன் 16 குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சில நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, "ஐபோன் 17 ஸ்லிம்", ஆப்பிள் நிறுவனத்தின் 2025ன் ஆண்டின் வரிசையில் மிகவும் விலையுயர்ந்த மாடலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன் விலை ஐபோன் 17 ப்ரோ மேக்ஸை விட அதிகமாக இருக்கும் என்று பரிந்துரைக்கிறது. இந்திய மதிப்பை பொறுத்தவரை ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை சுமார் 99,000 ஆகும். இந்த மாத தொடக்கத்தில், ஆப்பிள் ஐபாட் ப்ரோ (2024) அறிமுகப்படுத்தியதும் நினைவுகூரத்தக்கது. 

அதுமட்டுமல்லாமல் ஐபோன் 17 ஸ்லிம், முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் மைண்ட் வாய்ஸ் என்ன?

பொதுவாக பலருக்கும் ஐபோன் வாங்க அதிக ஆசை உண்டு, ஆனால் அதன் விலை தான் பலரையும் திடுக்கிட வைக்கிறது. அந்த வகையில் இருப்பதிலேயே அதிக விலையில் இந்த புது போனை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ள நிலையில், அடப்போங்கப்பா என்கிட்ட அடகு வைக்க எந்த பொருளும் இல்லை என்று கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் ஐபோன் பிரியர்கள்.  

ரூ.1500 கூட இல்லைங்க.. குறைந்த விலையில் விற்பனையாகும் சிறந்த கீபேட் ஃபோன்கள் இவைதான்..

click me!