வாட்ஸ்ஆப்பில் TANGEDCO நிறுவனத்தின் லோகோ மற்றும் பச்சை நிற டிக் மற்றும் மொபைல் எண் 94987 94987 ஆகியவற்றை உறுதி செய்து பில் செலுத்துமாறு மின்வாரியம் அறிவுறுத்துகிறது.
பொதுமக்கள் இனி வாட்ஸ்ஆப் மூலம் மின் கட்டணத்தைச் செலுத்தலாம் என தமிழ்நாடு அரசு மின் வாரியம் அறிவித்துள்ளது. மின்வாரிய இணையதளத்திலும் பல்வேறு கூகுள் பே போன்ற பேமெண்ட் செயலிகளும் மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ள நிலையில், இந்தப் புதிய வசதி அறிமுகமாகிறது.
இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கட்டணம் செலுத்துவதை எளிதாக்கி உள்ளது. பயன்பாடு 500 யூனிட்களுக்கு மேல் உள்ள நுகர்வோர்களுக்கு யு.பி.ஐ. வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ்ஆப் செய்தி வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் TANGEDCO நிறுவனத்தின் லோகோ மற்றும் பச்சை நிற டிக் மற்றும் மொபைல் எண் 94987 94987 ஆகியவற்றை உறுதி செய்யவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய வேண்டுமா? எவ்வளவு செலவாகும்? எப்படி முன்பதிவு செய்வது?
தமிழக அரசு வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது. இதனால் மின் வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த இழப்பை ஈடுகட்ட மின்வாரியிம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் வைத்திருப்பவர்களால் வாரியத்திற்கு இழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் பெற்று, குறைவான மின் கட்டணம் செலுத்துவதைத் தடுக்க வீடு வீடாக கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒரே பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒரே இணைப்பாக மாற்றி, மற்ற மின் இணைப்புகள் துண்டிக்கப்படும்.
ஒரே இணைப்பாக மாற்ற இணங்காவிட்டால், அனைத்து இணைப்புகளிலும் பயன்படுத்தும் மொத்த யூனிட்டையும் சேர்த்து, அதிலிருந்து 100 யூனிட்டை மட்டும் கழித்துவிட்டு மீதி கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்ட உள்ளது என்ற வதந்தி பரவி வருகிறது. இதனையும் மின் வாரியம் மறுத்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்று மின் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.
PF பணம் மூன்றே நாளில் கிடைக்கும்! அவசரத் தேவைக்கு ஆட்டோ செட்டில்மெண்ட் செய்யும் EPFO!