Glowing Skin In Summer : கோடை காலத்திலும் உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்க இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

First Published May 2, 2024, 4:25 PM IST

கோடையில் உங்கள் முகத்தை மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க ரோஜா மற்றும் தயிர் கொண்டு இந்த ஃபேஸ் பேக்கை பயன்படுத்துங்கள்.

கோடைக்காலத்தில் சருமத்திற்கு  கூடுதல் கவனம் தேவை. இல்லையெனில், பலவிதமான சரும் பிரச்சினைகள் வரும். அந்தவகையில், உங்கள் முகம் கோடையில் பொலிவாக இருக்க ரோஜா மற்றும் தயிர் சேர்த்து இந்த ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள். இதை வீட்டில் செய்வது மிகவும் எளிது.
இப்போது அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

ரோஜா இதழ்கள் மற்றும் தயிர்:
ரோஜா இதழ்கள் - 8 முதல் 10 வரை
தயிர் - 2 ஸ்பூன்

தயாரிப்பது: ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக் செய்ய, முதலில் ரோஜா இலைகளை நன்கு அரைத்து அதில் தயிர் கலந்து பேஸ்ட் போலாக்கி, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக் சருமத்திற்கு ஊட்டமளித்து குளிர்ச்சியூட்டுகிறது மற்றும்  பளபளப்பாக ஆக்குகிறது.

இதையும் படிங்க: Beauty Tips : குறைந்த செலவில் உங்கள் முகத்தை பளபளப்பாக்க 'இந்த' ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!

முல்தானி மிட்டி, தயிர் மற்றும் ரோஸ் வாட்டர்: 
முல்தானி மிட்டி - 2 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 1 ஸ்பூன்

தயாரிப்பது: முல்தானி மிட்டி, தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒன்றாக கலக்கி பேஸ்ட் போலாக்கி, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவுங்கள். இந்த பேஸ் பேக் கோடையில் எண்ணெய் பசை சரும பிரச்சனையை குறைத்து சருமத்தை பளபளப்பாக மாற்றும்.

இதையும் படிங்க: Beauty Tips : கோடையில் முகம் பொலிவாக இருக்க 'இந்த' சாக்லேட் ஃபேஸ் பேக்குகளை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!

வெள்ளரி சாறு, ரோஜா இதழ்கள் மற்றும் தயிர்:
வெள்ளரி சாறு - 1 ஸ்பூன்
தயிர் - 1 ஸ்பூன்
ரோஜா இதழ்கள் - 8 முதல் 10 வரை

தயாரிப்பது: இந்த பேஸ் பேக் செய்ய முதலில் ரோஜா இலைகளை நன்றாக நசுக்கி அதில் வெள்ளரி சாறு மற்றும் தயிர் கலந்து அதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவுங்கள். இந்த பேக் தோல் பதனிடுதலை நீக்கி முகத்தில் பொலிவை அதிகரிக்க செய்யும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!