மக்களை பிரித்தே வைத்திருந்தால் தான் ஓட்டு வாங்க முடியும் என காங்கிரஸ் நினைப்பதாக குற்றம்சாட்டிய தமிழிசை, இதனை சிறுபான்மையினர் மக்கள் புரிந்து கொள்வார்கள் என கூறினார்.
அச்சமான சூழ்நிலையில் மக்கள்
முன்னாள் ஆளுநரும், பாஜக மக்களவை தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தராஜன் சென்னையில் செய்தியாளரிடம் பேசியவர், தமிழகத்தில் போதை கலாச்சாரம் மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். பேருந்தில் பயணம் செய்தால் இருக்கைக்கு அடியில் கத்தி, அருவா போன்ற ஆயுதங்கள் இருக்கிறதா என்று நான் அச்சப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. மக்களின் மீது அக்கறை தமிழக அரசிடம் குறைந்து வருகிறது என குற்றம்சாட்டினார். தமிழக மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட வேண்டும். தமிழகத்தில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அமைச்சராவதற்கு முக்கிய தகுதியே ஊழல் செய்திருக்க வேண்டும் என்கிற அவல நிலை இருப்பதாக தெரிவித்தார்.
undefined
மத ரீதியாக பிளவுப்படுத்தவில்லை
ஆன்லைன் சூதாட்டம் மூலமாக தொடரும் உயிரிழப்புகள் அதிகமாவது குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர், ஆன்லைன் சூதாட்டத்தில் சட்டரீதியாக இதில் பிரச்சனை உள்ளது. இதை சட்ட ரீதியாக அணுக வேண்டும். இளைஞர்களுக்கு நான் கேட்டுக் கொள்வது சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் உயிரை இழக்கக்கூடாது என தெரிவித்தார். மத ரீதியாக மக்களை பிரதமர் மோடி பிளவு படுத்துகிறார் என் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், பிரதமர் யாரையும் அப்படி பிளவு படுத்தவில்லை, எல்லாரையும் ஒன்றாகத்தான் இணைக்கிறார், முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது, ஹஜ் பயணத்திற்கு பெண்களை அழைத்து செல்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகவும் கூறினார்.
பாஜக ஆட்சி உறுதி
மேலும் அனைத்து திட்டங்களையும் பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இணைத்து தான் தந்திருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் மக்களை பிரித்தே வைத்திருந்தால் தான் காங்கிரஸ் ஓட்டு வாங்க முடியும் என்றும், இதை சிறுபான்மையினர் மக்கள் புரிந்து கொள்வார்கள் என தெரிவித்தார். மக்கள் நன்றாக புரிந்து இருக்கிறார்கள் பிஜேபி கூட்டணி தேர்தலில் அதிக பெரும்பான்மை வந்துவிட்டது, மத்தியில் 3 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார் என தமிழிசை நம்பிக்கை தெரிவித்தார்.