ரிலீசுக்கு முன்பே தொடங்கிய வசூல் வேட்டை... SK-வின் அமரன் பட ஓடிடி ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?

First Published Mar 7, 2024, 11:22 AM IST

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளது.

Amaran Movie

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்தவர் சிவகார்த்திகேயன். தொகுப்பாளராக இருக்கும் போதே பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன இவர், தற்போது தன்னுடைய நடிப்புத் திறமையால் கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். கடின உழைப்பால் சினிமாவில் அடுத்தடுத்த உயரங்களை தொட்டு வரும் சிவகார்த்திகேயன், தற்போது அமரன் என்கிற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார்,

Sivakarthikeyan

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜன் என்கிற இராணுவ வீரரின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து தான் அமரன் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் மிலிட்டரி ஆபிஸராக நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... மஞ்சும்மல் பாய்ஸை ஓரம்கட்டுமா பா.இரஞ்சித் படம்? இந்தவார தியேட்டர் மற்றும் OTT ரிலீஸ் படங்களின் முழு லிஸ்ட் இதோ

Sivakarthikeyan's Amaran

இப்படத்திற்காக வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து கட்டுமஸ்தான் உடற்கட்டு மாறி இருக்கிறார் சிவகார்த்திகேயன். அதுமட்டுமின்றி மும்பையில் சிறப்பு பயிற்சி எடுத்து இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டன. தற்போது அமரன் படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அப்படத்தின் பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே அப்படம் குறித்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக கசிந்த வண்ணம் உள்ளன.

Amaran Movie OTT rights sold

அந்த வகையில், அமரன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை பெருந்தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, அமரன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.60 கோடி கொடுத்து கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் கெரியரில் அவர் நடித்த படங்களில் அதிக தொகைக்கு விற்பனையான திரைப்படம் என்றால் அது அமரன் தான். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த மாவீரன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை ரூ.34 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... லால் சலாம் சொதப்பியதற்கு காரணம் ரஜினிகாந்த் தானா? மொய்தீன் பாய் கேரக்டர் பற்றி ஐஸ்வர்யா சொன்ன அதிர்ச்சி தகவல்

click me!