Don: ஒரே வாரத்தில் டான் செம்ம வசூல் வேட்டை....தமிழகத்தில் மட்டும் ரூ 50 கோடியாம்..? படு குஷியில் ரசிகர்கள்...

First Published May 20, 2022, 12:33 PM IST

Don box office collection: சிவகார்த்திகேயன் நடிப்பில், வெளியான டான் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 

don

டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில், சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில்  மே 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள படம் டான். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.  இந்த படத்திற்கு  அனிரூத் இசையமைத்துள்ளார்.

don

டான் படம் கல்லூரி, அப்பா, மகன் சென்டிமென்ட் என கதைக்களம் அமைந்திருக்கிறது. இந்த படத்தை, லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து டான் படத்தை தயாரித்தன. மேலும், இப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

don

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் சிவாங்கி, மிர்ச்சி விஜய், முனீஸ்காந்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி பால சரவணன், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படம் பாஸிட்டிவான விமர்சங்களை பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமீபத்தில், ஒரே பேட்டியில் ரஜினி  படத்தை பார்த்து பாராட்டியதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். 

don

இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் தற்போது விஜய், அஜித்திற்கு இணையாகவே தமிழ் சினிமாவில் பட்டைய கிளப்பி வருகிறது. அதிலும் சென்டிமென்ட் காட்சிகள்  மக்களை அதிகம் அழ வைத்துவிட்டதாக அனைவருமே கூறி வருகிறார்கள்.

don

தற்போது, அதன் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.இந்நிலையில் டான் படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ 66 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். படம்,  தமிழகத்தில் மட்டுமே 7 நாள் முடிவில் ரூ. 46 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

don

கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இவை மிகப்பெரும்சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனால், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் டான் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் செம மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

click me!