19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை இனி 1911 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது.
சமையல் எரிவாயு விலை குறைந்தது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்தின்படி பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையை மாற்றம் செய்து நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் புதிய விலையை அறிவிக்கிறது. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் முதல் நாள் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட பொது பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்தது . அதாவது 1960 ரூபாய்க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ. 1930 ஆக குறைக்கப்பட்டது.
19 கிலோ சிலிண்டர் விலை என்ன.?
இந்தநிலையில் இன்று மீண்டும் வர்த்தக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை இனி 1911 ரூபாய்க்கு விற்பனையாகவுள்ளது. இதன் காரணமாக ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையானது அதிகரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லாமல் 818.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது
TENKASI : அடுத்தடுத்து OFF ஆகும் CCTV.. தென்காசியில் 95 கேமராக்கள் பழுது.! ஷாக் ஆகும் அரசியல் கட்சி