வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர்.. பிறந்த பச்சிளம் குழந்தையின் கால்களை வெட்டிய கொடூரம்

By Ajmal Khan  |  First Published May 1, 2024, 9:18 AM IST

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான பெண் செவிலியர் தனக்கு தானே பிரசம் பார்த்த நிலையில், பிறந்த குழந்தையின் காலை தனியாக வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா(24), இவர் தி. நகர் சவுத்போக் ரோட்டில் தங்கி  கடந்த ஒரு வருடங்களாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவருடன் வினிஷாவிற்கு காதல் ஏற்பட்டு இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஏழு மாதங்களாக வினிஷா கர்ப்பமான நிலையில், இன்று வினிஷாவிற்கு அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

தனக்கு தானே பிரசவம்

இந்த நிலையில், குழந்தையின் இரு கால்களையும் வினிஷாவே வெட்டி எடுத்து பிரசவம் பார்த்ததால் இறந்த நிலையில் குழந்தை பிறந்துள்ளது. இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  இறந்த குழந்தையை பத்திரப்படுத்திய மருத்துவர்கள் வினிஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தியாகராய நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 தனக்கு தானே பிரசவம் பார்த்த செவிலியர் மீது இரு பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஒருவருடைய சம்மதமின்றி அவரைத் தாக்கும்போது ஒரு குற்றத்தை புரியவேண்டும் என்ற நோக்கில் செயல்படுதல், குற்றத்தை மறைத்து குற்றவாளியை காப்பாற்றும் செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட இரு பிரிவுகள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக செவிலியரின் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட செவிலியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் சிகிச்சை முடிந்த பின் விசாரணை நடத்த போலிசார் திட்டம்.

TENKASI : அடுத்தடுத்து OFF ஆகும் CCTV.. தென்காசியில் 95 கேமராக்கள் பழுது.! ஷாக் ஆகும் அரசியல் கட்சி

click me!