Game Changer: ராம்சரண் பிறந்தநாள் பரிசாக கேம் சேஞ்சர் படத்தின் பிரம்மாண்ட அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் ஷங்கர்

First Published Mar 26, 2024, 11:33 AM IST

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ் ஆகும் என்கிற அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Ramcharan

ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நடிகர் ராம்சரணின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. அவர் நடிப்பில் தற்போது கேம் சேஞ்சர் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.

Game Changer

கேம் சேஞ்சர் படத்தில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா போன்ற பிரபலங்களும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில், தற்போது கேம் சேஞ்சர் படத்தின் மாஸ் அப்டேட்டை படக்குழு சர்ப்ரைஸாக வெளியிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... Thug Life : கமலின் தக் லைஃப் படத்தில் இணையும் சிம்பு... அப்போ STR 48 படத்தோட நிலைமை?

Shankar, Ramcharan

அதன்படி நாளை கேம் சேஞ்சர் படத்தின் நாயகன் ராம்சரணின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு பரிசளிக்கும் வகையில் நாளை காலை 9 மணிக்கு கேம் சேஞ்சர் படத்தில் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜரகண்டி என தொடங்கும் அப்பாடலுக்கு தமன் இசையமைத்து உள்ளார். அத்துடன் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

Game changer First Single Update

கேம் சேஞ்சர் திரைப்படம் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை தான் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் கேம் சேஞ்சர் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.

இதையும் படியுங்கள்... Ajith : லவ் டுடே முதல் ஜீன்ஸ் வரை... என்னது இதெல்லாம் அஜித் நடிக்கவேண்டிய படமா? நல்ல சான்ஸை மிஸ் பண்ணிய AK

click me!